Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்மாவட்டத்திற்கான வாக்காளர்களில் 300 000 விபரங்கள் இனிவரும் தேர்தல்களில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள் எனவும் அவர்கள் அனைவரும் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டதாகவும் சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக யாழ் மாவட்டத்திற்கு இதுவரைகாலமும் தெரிவுசெய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் ஒன்பதிலிருந்து ஆறாக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய கணக்கெடுப்புகளின்படி 500 000 தமிழ்வாக்காளர்களே யாழ்மாவட்டத்தில் வசிப்பதாகவும் அண்மையில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களும் இனிமேல்தான் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

பத்துவருடங்களுக்கு முன்னரே வெளியேறிய வாக்காளர்களின் பெயர்விபரங்கள் கூட பேணப்பட்டுவந்ததாகவும் ஆனால் அதனை நீக்கும் முடிவை தற்போது எடுத்துள்ளதாகவும் அவர்கள் மேலும் அறிவித்துள்ளனர்.

ஆனால் போர் காரணமாகவே ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் பாதுகாப்பு தேடி புலம்பெயர்ந்துள்ளனர் என்பதை கணக்கில் எடுக்காமல் அங்கிருக்கும் மக்களை வெளியேற்றி அவர்களின் அரசியல் பலத்தை குறைக்கும் நடவடிக்கையில் எவ்வாறு தற்போதைய அரசு செயற்படுகின்றது என்பதற்கு இதுவும் நல்லதொரு உதாரணம் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்துதெரிவித்தார்.

தமிழ்மக்கள் மீது பேரழிவு யுத்தத்தை நடத்தி 100 000 இற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்றும் 1000 000 இற்கும் மேற்பட்ட தமிழர்களை புலம்பெயரவும் செய்த சிங்கள அரசு தற்போது தமிழ் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றியமைக்கவுள்ளதாக அறிவுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈழநேசன்

1 Response to யாழ்மாவட்ட வாக்காளர்கள் 300 000 பேரின் பதிவுகள் நீக்கம்! நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாகும்!! அரசின் அடுத்த நகர்வு!!!

  1. why you can't relay the TamilEela thesiyageetham

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com