Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கருணா 1990ம் ஆண்டுப் பகுதியில் சுமார் 600 பொலிசாரை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டார் என்று அப்போது அவ்விடத்தில் கடமையாற்றிய அஜித் தர்மபால என்ற பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், அப்போது பொலிஸ் மா அதிபராகவிருந்த பிராங் சில்வா கிழக்கு மாகாணத்திற்கு ஹெலிகொப்டர் முலம் வந்து, வானில் பறந்தபடி தமக்கு உத்தரவுகளைப் பிறப்பித்ததாக தெரிவித்துள்ளார். புலிகள் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த அவ்வேளை, போலீஸ் நிலையங்களை மூடி விட்டு, ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு விடுதலைப்புலிகளிடம் சரணடையுமாறு அவர் ஹெலிகொப்டரில் இருந்து அறிவித்ததாக அஜித் தர்மபால மேலும் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் தான் தொடர்ந்தும் போரிட தயாராக இருந்ததை பொலிஸ் மா அதிபருக்கு அஜித் தர்மபால தெரிவித்தபோது, தகாத வார்த்தையால் தம்மை ஏசிய பொலிஸ் மா அதிபர், உடனடியாகச் சென்று சரணடையுமாறு பணித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதேவேளை கருணா குழுவிடம் மாட்டிக்கொண்ட சுமார் 600 பொலிசாரை சுட்டுக்கொல்லுமாறு கருணாவே உத்தரவிட்டதாகவும் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார். இதனை நல்லிணக்க ஆணைகுழுவிடம் தெரிவிக்க தான் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சமீபத்தில் இந்த ஆணைக்குழு முன் சாட்சியமளித்த கருணா இக் கொலைதொடர்பாக தனக்கு சம்பந்தம் இல்லை எனத் தெரிவித்துள்ள நிலையிலேயே இச் செய்திகள் வெளியாகியுள்ளது.

0 Responses to 600 பொலிசாரை சுட்டுக்கொல்லுமாறு கருணாவே உத்தரவிட்டார்: அஜித் தர்மபால

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com