அறுபது ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை உரிய முறையில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் வரலாற்றுக் கடமையாகும்.
ஈழத் தமிழர் பிரச்சினையை தமிழ் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல நாங்கள் ஒருபோதும் தவற மாட்டோம். அதன் காரணமாக தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் ஈழத்தமிழர் பிரச்சினை எதிரொலிக்கவே செய்யும்.
தமிழீழம் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே எங்களது பிரதான இலக்கு. அதற்கான வழிகள் குறித்தே எங்கள் கவனம் பதிந்திருக்கும்.
அந்த வகையில் இனிவரும் காலங்களில் ஈழத் தமிழர் போராட்டம் அறிவாயுதம் ஏந்திய போராட்டமாக முன் கொண்டு செல்லப்படும். நாம் தமிழர் இயக்கம் அதற்காகத் தொடர்ந்தும் பங்களிப்பை நல்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



0 Responses to ஈழப் போராட்டம் முடிந்து விடவில்லை, அது புதிய முறையில் முன்னெடுக்கப்படும்: சீமான்