இந்த விபத்தின் போது பலர் மரணமாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கப்பல் கிறிஸ்மஸ் தீவில் உள்ள மலை ஒன்றில் மோதிய நிலையிலேயே கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் நீரில் மூழ்கிய போது அதில் 70 பேர் வரை இருந்துள்ளனர்.
இலங்கையர்கள் அதில் இருந்தார்களா? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
விபத்தின் பின்னர் 40 பேர் கப்பலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில்; கடலில் மரணமான பெண்கள் மற்றும் சிறுவர்களின் சடலங்கள் காணப்படுவதாக மீட்புப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடல் கொந்தளிப்பு காரணமாகவே இந்த கப்பல் மலையில் மோதியதாக கிறிஸ்மஸ் தீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.



0 Responses to கிறிஸ்மஸ் தீவில் மலை ஒன்றுடன் மோதிய கப்பல் (காணொளி இணைப்பு)