சிறிலங்காவில் யுத்தக் குற்றங்கள் நடைபெற்றதா என ஐ.நா. ஆலோசனைக்குழுவிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சகல விபரங்களும் அடங்கும் வகையில் தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணத்தை அனுப்பியுள்ளது.கேணல் ரமேஸ் அவர்களின் இறுதித் தொடர்பு சம்பந்தமான அவரது மனைவியின் வாக்குமூலமும், வெள்ளைக்கொடியுடன் சென்ற திரு நடேசன் அவர்களின் இறுதிக் கணம் தொடர்பான அவரது மகனின் வாக்குமூலமும், மாவீரர் துயிலுமில்லங்களின் அழிப்பும் இவ் ஆவணத்தில் அடங்கும்.
அந்த ஆவணத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட படுகொலைகளின் விபரங்கள் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
2009ம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் 60,000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஆலோசனை வழங்குவதற்காக “செயலாளர் நாயகத்தின் சிறிலங்கா தொடர்பான ஆலோசனைக் குழு” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தக் குழு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களினால் நியமிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்தும், இறந்தவர்களுடைய குடும்ப அங்கத்தவர்களிடமிருந்தும் பெறப்பட்ட தகவல்களையும் வாக்குமூலங்களையும் கொண்டு இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றஙகள் ஆகிய விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சினால் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
வெள்ளைக் கொடியுடன் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.நடேசன் அவர்களும், சமாதானச் செயலகப் பொறுப்பாளர் திரு. புலித்தேவன் அவர்களும் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடையச் சென்றபோது இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.நடேசனுடைய மகன் வழங்கிய வாக்குமூலமும், கேணல் ரமேஸ் அவர்களின் இறுதிக்கட்ட தொடர்புகள் பற்றி அவருடைய மனைவி வழங்கிய வாக்குமூலமும் இந்த ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மாவீரர் துயிலுமில்லங்களின் அழிப்பும் இவ் ஆவணத்தில் அடங்கும்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஐ.நா. குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள இந்த ஆவணத்தில் சிறிலங்கா அரசாங்கம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்த இனப்படுகொலையுடன் சம்பந்தப்பட்ட சகலவிதமான குற்றங்களும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
நடைபெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற கொடூரமான சம்பவங்களை சிறிலங்காவின் அரசியல் சரித்திரத்துடன் இணைத்துப் பார்க்குமாறும் ஐ.நா. குழுவிடம் கேட்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவம் 99 வீதமான சிங்களவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள விடயமும் பாதிக்கப்பட்ட அத்தனை மக்களும் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்னும் விபரமும் இந்த ஆவணத்தின் மூலம் ஐ.நா. குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வன்னியில் நடைபெற்ற கொடுமைகள் யாவும் கடந்த 30 ஆண்டுகளாக சிறிலங்கா அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வந்த இனஅழிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியே” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றங்களுக்கான அமைச்சு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தொடர்புகளுக்கு: அமைச்சர் டிலக்ஷன் மொறிஸ் 0044 7940020758
warcrime@tgte.org



0 Responses to போர்க்குற்றங்கள் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா. சபைக்கு அனுப்பிய ஆவணம்