Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐரோப்பாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்வோரில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இருக்கின்றார்களா என பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

மேற்குலக நாடுகளிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்வோரில் புலி ஆதரவு வெளிநாட்டவர்கள் இருக்கின்றார்களா என புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தையும் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரை வலுப்படுத்தவும் இவ்வாறு புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, லண்டனில் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தால் அவர்களிடம் விசாரணை நடத்தும் நோக்கில் கைது செய்வதற்கு பாதுகாப்புத் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

0 Responses to புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுதலைபுலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு விஜயம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com