Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சில் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகம் அமைந்துள்ள நகரான நந்தியார் என்னும் நகரத்தில் தமிழீழ தேசத்தின் முதல் ராஐதந்திரியும், தேசத்தின் குரலுமாகிய கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 4 வது நினைவு வணக்க நிகழ்வு 19.12.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகியது.

பொதுச்சுடரினை பிரெஞ்சுக்கிளைப்பொறுப்பாளர் ஏற்றி வைக்க, அதனைத்தொடர்ந்து அகவணக்கத்துடன் ஈகைச்சுடரினை மாவீரர் குடும்பத்தை சேர்ந்த சகோதரி ஏற்றிவைக்க குழந்தைகளும்று மக்களும் சுடரினையும், மலர்வணக்கத்தையும் செய்திருந்தனர்.

பாலா அண்ணன் நினைவு தரும் பாடலை திறாஞ்சி தமிழ்ச்சோலை மாணவி சூரியா பாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து பாலா அண்ணன் தன்வாழ்நாளில் அரசியல், ராஐதந்திர ரீதியாக தாயக விடுதலைக்காக செய்த பணிகள் உலக அரங்கில் எமது நியாயமான உரிமைப்போராட்டம் அவரால் முன்கொண்டு செல்லப்பட்டதென்றும், எமது விடுதலையில் உலகத்தினது உண்மை உருவத்திற்கு முன்னால் தேசியத்தலைவரின் உண்மை நிலைப்பாட்டை கொண்டு சென்றவர் என்றும் இன்று அவரின் அந்த இடத்தை நிரப்புவதற்கு யாரும் இல்லாததொரு துர்பாக்கிய நிலை தமிழீழ மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றும், வசதியாக வாழ வல்லமை கொண்ட ஒரு மனிதன் தனது மண்ணுக்காக, மக்களுக்காக, அவர்களின் சுதந்திர நல்வாழ்வுக்காக பட்ட துன்பங்கள், வேதனைகளையும், எதிலும் சுவண்டு விடாது சாகும் வரை தன்னுடைய இனத்திற்காக பாடுபட்ட அந்த உன்னத மனிதனுக்கு தேசியத்தலைவர் அவர்களால் கொடுப்பட்ட தேசத்தின் குரல் என்ற உயரிய பட்டமும் அந்தஸ்தும் ஒரு எடுத்துக்காட்டாகும் என்றும் அவரின் கனவையும், மாவீரர்களின் கனவையும் நிறைவேற்ற தொடர்ந்து அரசியல் ராஐதந்திர வழிகளில் பாடுபட வேண்டும் என்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் முக்கிய உறுப்பினர் திரு. சத்தியதாசன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து விடுதலை எழுச்சிப்பாடலுக்கு நந்தியார் தமிழ்ச்சோலை மாணவிகள் நடனம் வழங்கியிருந்தனர். நம்புங்கள் தமிழீழம் எழுச்சிப்பாடலுடன் நினைவுகூரல் நிறைவுபெற்றது.

கொட்டும் பனிமழைக்குள்ளும் பல மக்கள் கலந்து கொண்டு தேசத்தின் குரலுக்கு தமது நினைவு வணக்கத்தை தெரிவித்திருந்தனர்.





0 Responses to பிரான்சில் நடைபெற்ற தேசத்தின் குரல் நினைவு வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com