இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
தமிழ் நாட்டிற்கு இருநாள் பயணத்தை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அங்கு ஈழத் தமிழ் மக்கள் மீதான அக்கறையை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தமிழ் மக்கள் பிரச்சினையை அவர் உணர்ந்துள்ளதுடன் தீர்க்கப்பட வேண்டியுள்ளது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
இது காலம் கடந்த ஞானமென்றே நான் கருதுகின்றேன். இன்றைய பேரினவாத ஆட்சியாளர் நிலைபெறுவதற்கும் பேரினவாதத்தை உச்சரிப்போருக்கும் இந்திய அரசே பக்கபலமாக இருந்தது. இது வெளிப்படையானதாகும்.
மேலும் போர் உச்சக் கட்டம் அடைவதற்கு முன் உண்மையில் இந்திய அரசு கூறுவது போன்ற விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தை நினைத்திருந்தால், தனியாகக் கையாண்டிருக்கலாம்.
எது எப்படியாயினும் அவர்களைச் சுற்றியுள்ள ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளின் அணியுடன் இலங்கை அரசை பேச்சுவார்த்தை நடத்த வைத்து ஒரு அதிகாரப் பகிர்வு நிலையை நோக்கி முன்னேறியிருந்தால் விடுதலைப் புலிகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பர்.
ஆனால், எதையும் இந்திய அரசு செய்யவில்லை. மாறாக இலங்கையின் பேரினவாதத்துக்கு முற்றுமுழுதாக ஆதரவினை வழங்கியதுடன் தமிழ் மக்களின் ஆதரவு போராட்டத்தை முற்றுமுழுதாக அழித்ததே இந்தியாவின் சாதனையாகும்.
13 அரசியல் திருத்தத்துக்கு மேல் அதிகாரத்தை வழங்குவதன் மூலம் தமிழ் மக்களைத் தமது பக்கம் கவர்ந்திழுக்க முடியும். அதனை அவர்கள் செய்யவில்லை.
தற்போது இந்திய அரசை பார்க்கின்ற போது மாதன முத்தாவின் கதையே ஞாபகம் வருகின்றது. முதலில் ஆட்டைக் கொன்று பானையை உடைத்ததாகவே தமிழ் மக்களின் பிரச்சினை மாறியுள்ளது.



0 Responses to ஈழத் தமிழர் மீது ராகுல் காந்திக்கு காலம் கடந்த ஞானம்!: விக்கிரமபாகு கிண்டல்