இதனால் தேங்காய்க்குக் கட்டுப்பாட்டு விலையும் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. அப்படியிருந்தும் சாதாரண தேங்காய் 40 ரூபாவிற்கும், அதைவிட பெரிய தேங்காய் 50 ரூபா தொடக்கம் 60 ரூபா வரையும் விற்பனையாகின்றது.
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் வீடமைப்புத் திட்டங்களுக்காகவும் தென்னை மரங்கள் வெட்டப்படுவதனாலேயே தேங்காய்க்குத் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உரத்தின் விலையேற்றமும் இந்தத் தட்டுப்பாட்டிற்கு மற்றுமொரு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தத் தட்டுப்பாடு காரணமாக தென்னை அபிவிருத்திச் சபையின் முன் அனுமதியின்றி எவரும் தென்னை மரங்களை வெட்ட முடியாது என்ற கட்டுப்பாட்டையும் அரசு அறிவித்திருக்கின்றது.
இதுவரையிலும் இல்லாத அளவிற்குத் தற்போது நாட்டில் தேங்காய் விலை அதிகரித்துள்ளதாகவும், அதற்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
தேங்காய் இல்லாமல் சமைக்கவே முடியாது என்று கூறும் குடும்பத் தலைவிகள், தேங்காயின் பயன்பாட்டைப் பெரிதும் தாங்கள் குறைத்து நிலைமையைச் சமாளிப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் கூறுகின்றார்கள்.
சமையலில் மட்டுமன்றி, மத வைபவங்கள், மங்கள காரியங்கள், கலை கலாசாரம் என்பவற்றிலும் தேங்காய் முக்கிய இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



0 Responses to தேங்காய் இல்லாமல் சமைக்கவே முடியாது: (படங்கள் இணைப்பு)