Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உனக்கான மொழி - கவிதை - முல்லைஅமுதன்

பதிந்தவர்: ஈழப்பிரியா 20 December 2010

இன்று..!

எல்லைகளைப் பிரித்து போடு!.

உனக்கான நிலத்தை நீயே -

வரையறை செய்து கொள்!

வேலிகளை பலமாக்கு.


எனியும் வயிரவ சூலங்களை

நாட்டுகின்ற செயல் முறையை

இல்லாதொழி!


அரச மரங்கள் முளை விடமுன்

உன் கொடியே

உனதென -

ஊன்றி நடு!


எவன் வருவான்

என்பதெல்லாம் பொய் என்றுணர்.

அயலவனுக்கும் சொல்லி வை..

அல்லது புரிய வை!


இறுமாப்போடு வாழ எனியாகிலும் பழகிக் கொள்.

கோவணமும் பிடுங்கியாயிற்று.

பூவரசம் இலையில் -

ஊதுகுழல் ஊதலாம் என்கிற கனவை விட


தென்னையிலும்

வெடி சுரக்கும் என்பதை எதிரி உணரட்டுமே!

உனக்கான மொழி இல்லை

என்று -

அவனும் சொன்னதில் வரம் கொள்.


அயலவனையும் -

யோசிக்க வை.

அவனுக்கும் சேர்த்தே -

உன் மொழியில்

தேசிய கீதம் பாடிப் பழகு!!

தேவாரங்களும் பொய்க்கட்டும்!



-முல்லைஅமுதன்.

19/12/2010

0 Responses to உனக்கான மொழி - கவிதை - முல்லைஅமுதன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com