
கட்டுநாயகா விமானநிலையத்தின் ஓடுபாதையில் விமானம் தரைதட்டி ஓடத் தொடங்கிய பின்னர்தான் மகிந்தர் பெருமூச்சுவிட்டு ஆசுவாசமாகி இருப்பார். அவருக்கு லண்டனில் நடந்தது அவர் எதிர்பார்த்திருக்காததுதான்.ஆனால் உலகின் எல்லா கொடுங்கோலர்களும்,ஆக்கிரமிப்பாளர்களும் இப்படியான ஒரு கையறுநிலையில் என்றாவது ஒருநாள் நின்றிருந்ததாகவே வரலாற்றின் பக்கங்க ளில் நிறைய காணப்படுகின்றன.
விமானநிலையத்தின் ஓடுபாதையில் விமானம் தரைதட்டி ஓடத் தொடங்கிய பின்னர்தான் மகிந்தர் பெருமூச்சுவிட்டு ஆசுவாசமாகி இருப்பார். அவருக்கு லண்டனில் நடந்தது அவர் எதிர்பார்த்திருக்காததுதான்.ஆனால் உலகின் எல்லா கொடுங்கோலர்களும்,ஆக்கிரமிப்பாளர்களும் இப்படியான ஒரு கையறுநிலையில் என்றாவது ஒருநாள் நின்றிருந்ததாகவே வரலாற்றின் பக்கங்க ளில் நிறைய காணப்படுகின்றன.
அவர்களின் வீழ்ச்சிக்கு முன்பதாக,அல்லது அவர் களின் ஆதிக்ககனவின் அழிவின் முன்பதாக இப்படியான அறிகுறிகள் ஒவ்வொரு ஆக்கிரமிப்பாளர்களுக்கும் கிடைத்திருக்கும்.ஆனால் யார்தான் அதைக் கருத்தில் எடுத்திருக்கிறார்கள்.மகிந்தரின் பேரினவாதஆணவத்துக்கும்,இனித்தொடர்ந்து என்று மே வெற்றிதான் என்ற கற்பனைக்கும் மிகப்பெரிய கொள்ளிசொருகப்பட்ட பின்பும் மீசையில் மண்படாத மன்னரின் நினைப்புடனே இன்னும் தொடர்கிறார்.
ஆனாலும் போனவாரத்து லண்டன் சம்பவங்கள் சிங்களத்தினுள்ளும் தமிழ்உலக த்திலும் எதிர்பாராத அக-புற மாற்றங்களையும்,நம்பிக்கைகளையும்,ஏற்படுத்தியதா க இருக்கின்றது.சிங்களப்பேரினவாதம் இன்னும் இதன் திகைப்பிலும்,இதன்பெரும் தாக்கத்திலும் இருந்து விடுபடமுடியாமல் தவிப்பதை அதன் அறிக்கைகள், சவால்கள்,மீள்ஆட்டத்துக்கான(சநஅயவஉh)அழைப்புகளைப்போன்ற அறைகூவல்கள், சமாளிப்புகள்,கோபங்கள் என்பனவற்றில் இருந்து தெளிவாக அறியக்கூடியதாக இருக்கின்றது.
இப்போது அவர்களுக்கு ஏற்பட்டுஇருப்பது இதற்கு முந்தைய முப் புந்தைந்து ஆண்டுகால ஆயுதப்போராட்டகாலத்தில் ஏற்பட்டு இருந்ததைவிட வித் தியாசமான மனச்சிதைவு.அவர்கள் மே18க்கு பிறகு எல்லாம் முடிந்தது எனவும் இனி ஏதோ ஒரு சில புனர்வாழ்வுஅமைப்புகளைக்கொண்டு தமிழர்களின் தலைக் குமேலாக துட்டகைமுனுவின் தேர்ச்சில்லை காலகாலமாக ஓடவிடலாம் என்று கற்பனைக்குள் முழுவதுமாக சென்றுவிட்டிருந்தார்கள்.
வல்லாதிக்கத்தின் துணையு டன் தமிழருக்கு கொடுத்த அடியில் தமிழர் எழுந்துகொள்ளவும்,நிமிர்ந்துகொள்ள வும் நீண்டநூற்றாண்டு செல்லும் என்று நினைத்திருந்தார்கள்.இப்படிஒரு இடி இங் குpலாந்து மண்ணில் இறங்கும்என அவர்கள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. (ஆனால் இப்போது அமைச்சர் பீரிஸ் ஏதோ எதிர்ப்புவரும் என்று எதிர்பார்த்துதா ன் சனாதிபதி இங்கிலாந்து வந்தார் என்றும்,எதிர்ப்புகளை சந்திக்கவே துணிவுட ன் வந்தார் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் மகிந்த ஓடியஓட்டத்தை பார்த்தால் எதிர்பார்த்துவந்த எதிர்ப்புக்கு ஓடியதுபோல தெரியவில்லையே...!) எல்லாம் இழந்து காலுக்கு கீழே சுருண்டுகிடக்கும் ஈழத்தமிழினத்துக்கு ஏதாவது பிய்த்துப்போடலாம் அல்லது இருப்பதையும் சுருட்டலாம் என்ற பேரினவாத நினைப்பு ஆடிப்போய்இருக்கிறது மகிந்தருக்கு எதிரான லண்டன்எழுச்சிக்கு பிறகு.

ஈழத்தமிழினத்தின் விடுதலைப்போராட்டத்தை நசுக்கியவர் என்றும்,பூண்டோடு கிள்ளி எறிந்தவர் என்றும்,சிங்களபேரினவாதத்தின் காவலர் என்றும் சிங்களமக்க ள் மத்தியில் பெரியபிம்பங்களில் வாழும் மகிந்தருக்கே இந்தக்கதி எனும்போது சாதாரணசிங்களவர் பெருங்கவலையில்தான் இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கத்தில் சிங்களஆட்சியாளர்கள் தமக்கு லண்டனில் நடந்த மூக்க றுப்புக்கு காரணங்களை தமது பக்கத்திலேயே தேடி அதற்குள் குழம்பிப்போயும் தன்னோடுநிற்கும் ஒவ்வொருவரையும் சந்தேகத்துடன் பார்க்கும்போக்கும்,அவர்க ளையே பழிசொல்லும் பாங்கும் அதிகரித்துள்ளது.
விடுதலையை தேடும் ஒரு இனத்தின் எழுச்சியானது உலகத்தின் நடுமுற்றத்திலேயே முளைவிட்டு எழுந்து நிற்பதை சிங்களம் பதை பதைப்புடன் பார்த்துநிற்கிறது.இந்த எழுச்சியானது, எங்கே போர்குற்றம்,சர்வதேசவிசாரணை என்று படுகுழியுள் சிங்களமனோபாவத் தை தள்ளி மண்போட்டு மூடிவிடும் என்று பெருங்கவலையில் கைபிசைந்துநிற்கி றது.மொத்தத்தில் சிங்களத்தின் மனோஉறுதியும்,வெற்றிக்களிப்பும் வெகுவாக குறைந்துபோய்நிற்கிறது இப்போது.
அதற்கு ஊட்டம்கொடுத்து எழச்செய்வதற்கு கிளிநொச்சியிலும்,யாழ்ப்பாணத்திலும் ஊர்வலங்களை நடாத்தி ஈடுகட்டஎடுத்த முயற்சிகளும் அதன் ஒப்பனைக்குறை வால் தோற்றுப்போய்விட்டது.இன்னொரு பக்கத்தால்,தமிழர்கள் தம்முடன் நிற்கி றார்கள் என்று காட்டுவதற்காக எறியும் எலும்பை பாய்ந்துஎடுக்கும் கருணா போன்றவர்களை வைத்து மகிந்த ஆதரவு அறிக்கைகளை விடச்செய்தும் வருகி ன்றார்கள்.
இப்போது தமிழ்கூட்டமைப்பின் சில மதில்மேல் பூனைகளைக் கொண்டு லண்டன்எழுச்சியை விமர்சித்துஅறிக்கை விடச்செய்யும் முயற்சியில் சிங்களத்தி ன் புரோக்கர்களும்,அதன் தமிழ்கூட்டாளிகளும் இப்போது ஈடுபட்டுள்ளனர்.இந்த ஆக்கம் அச்சுக்குவரும்போது ஒருவேளை கூட்டமைப்பின் முக்கியத்தர்களில் யாராவது ஒருவர் மகிந்தருக்கு லண்டனில் காட்டிய எதிர்ப்புக்கு கண்டனம் தெரி வித்து தமிழ்,ஆங்கில ஊடகங்களில் அறிக்கை விட்டுஇருக்கலாம்.
இப்படி எதற்குள்ளாகவும் புகுந்து இந்த பின்னடைவையும்,போர்க்குற்றச்சாட்டுக ளையும் சமாளிக்க சிங்களம் கடும் பிரயத்தனங்களை செய்துகொண்டே வருகின்றது. மறுபுறத்தில்,தமிழர்களை பொறுத்தவரையில் மே18 க்கு பின்னர் எல்லாம் முடிந் ததென பெருஞ்சோகத்திலும்,விரக்தியிலும் முகம்புதைந்துநின்ற தமிழர்களுக்கு மகிந்தரின் வரவும்,அவருக்கு எதிரான எழுச்சியும் மிகப்பெரிய நம்பிக்கையையும், எதற்கும் தயாரன ஒரு நிலையையும் தோற்றுவித்துள்ளது.இது ஒன்றே மிகப்பிரதா னமானது ஆகும்.
விடுதலைக்காக போராடும் ஒரு இனம் தனது இலக்கின்மீதான நம்பிக்கையை இழப்பதென்பது தனக்குத்தானே புதைகுழியை தோண்டி அதற்குள் தானே மண்மூடி உறங்குவதற்கு சமனானதுஆகும்.தேசியத்தலைவரின் நாற்பது ஆண்டுகால வழிகாட்டலும்,நாற்பதினாயிரத்து மாவீரர்களின் அர்ப்பணிப்புநிறைந்த தியாகவாழ்வும் ஒரு சிறு நீர்க்குமிழிபோல உடைந்துபோய்விடுமா என்ன?அது ஒரு கருத்தாகவும்,ஆழமான பிடிப்பாகவும் எமது மக்களுக்குள் உறங்கிநிற்கிறது.
அது மடைதிறக்கும்போது என்ன நடக்கும் என்பதையும்,எல்லோரும் சேர்ந்து எழுந்தால் என்ன நடத்திமுடிக்கலாம் என்பதையும் இப்போது எம் மக்கள் உணரத்தொடங்கி விட்டனர். மகிந்தருக்கு எதிரான எழுச்சியின்போது தாங்கள் தோற்றதாக சிங்களம் நினைப் பதற்கு அங்கு கூடிய மக்களைவிடவும்,அவர்களின் கோசங்களைவிடவும் அவர்க ள் எல்லோரும் தாங்கிநின்றதும்,உயரத்தூக்கிப்பிடித்ததுமான தேசியக்கொடிதான் முக்கியகாரணம்.இதன்மூலம் சிங்களத்துக்கு காட்டும் எதிர்ப்புக்கான ஒரு பொதுக் குறியீடாக எமது தேசியக்கொடி எழுந்துநிற்கிறது.
இலங்கைத்தீவின் இரண்டு தேசங்கள் என்ற கோட்பாடு எமது தேசியக்கொடியின் உயர்ததுதலுடன் எழுகின் றது. இதனால் கொண்ட உத்வேகம் இப்போது போர்க்குற்றஆதரங்களை சேகரித்தல், விசாரணைக்கு உட்படுத்து அழுத்தம் கொடுத்தல் என்று தமிழ்மக்கள் ஈடுபாடு அதிகமாகின்றது.ஏதோ ஒரு விதத்தில் மகிந்தரின் லண்டன் பயணம் இடையில் அகாலமாக முடிந்தாலும்,தமிழருக்கு அது ஒரு முடிவில் இருந்து மீளஎழுவதற்கா ன நம்பிக்கையும்,ஆன்மஉறுதியையும் கொடுத்துள்ளது.
இனி இதனை ஆறவிடாம ல்,அணையவிடாமல்,ஓயவிடாமல் கொண்டுசெல்லவேண்டியது ஊடகங்களினதும் அமைப்புகளினதும் கடமையாகும். இதனையே ஒரு இறுதிவெற்றியாக நினைத்து அதன் குதூகலிப்புக்குள் நாம் தொலைந்துபோய்விடக்கூடாது.இறுதிவெற்றி என்பது மாவீரரின் கனவை நனவாக் கும்போதுதான் ஏற்படும்.அதற்காக ஒற்றுமையுடன் எழவேண்டும்.
எதிரியையும் குறைத்துமதிப்பிட்டுவிடுதல் ஆகாது.மகிந்தரின் முகத்தில் பூசப்பட்ட அவமானத்தை துடைக்கவும்,போர்க்குற்றங்களில் இருந்து சறுகவும் சிங்களம் இனிவரும் காலங்களில் மிகமுனைப்பு காட்டும்.ஏதாவது ஒரு பெருவெற்றியை சிங்களசாதாரணமக்களுக்கு காட்;டவேண்டிய தேவைக்குள் மகிந்தகும்பல்இப்போ அவசரமாக நிற்கிறது.அவர்களின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்து இனி மேலும் மேலும் எழுவது ஒன்றுதான் இப்போது இருக்கும் ஒரே போர்முறை!
தமிழீழ புரட்சிகர மாணவர்கள்.



0 Responses to என்னை போக விடுங்கோ.......... மகாராணி காப்பாத்துங்கோ! இப்படித்தான் லண்டன்ல இருந்து ஓ..........டி வந்தனான்!