Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2ஜி முறைகேடுக்கும் தமிழ் மையத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, சந்தேகத்தின் பேரிலேயே சி.பி.. சோதனை நடந்துள்ளதுஎன்று பாதிரியார் கூறினார். தமிழ் மையத்தின் நிர்வாக அறங்காவலர் பாதிரியார் ஜெகத் கஸ்பார், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘’சி.பி.. தமிழ் மையம் அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை 9.30 மணி முதல் தேடுதல் நடத்தியது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்ததாக பேசப்படும் ஊழல் பணம் தமிழ் மையத்திற்கும் வந்ததா என்பதை அறியவே இத்தேடுதல் என என்னிடம் கூறப்பட்டது.

2ஜி அலைக்கற்றை சர்ச்சைகளுக்கும் தமிழ் மையத்திற்கும், அதன் நிர்வாக அறங்காவலரான எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எங்கள் மீது அத்தகைய ஐயப்பாடுகளை எழுப்புவது அபாண்டமானது.

தமிழ் மையத்தின் வரவு-செலவு கணக்குகள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டவை. தமிழ் மையத்தின் நிகழ்ச்சிகள் தொழில், வர்த்தகத்துறை புரவலர்களின் உதவியோடு நடப்பவை. இந்த பணத்தை காசோலையாக மட்டுமே பெறுகிறோம். எங்களது கணக்குகள் நேர்மையானது, வெளிப்படையானது. சென்னை சங்கமம், சென்னை மாரத்தான் போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்.

அரசியல்வாதிகளோடு இணைந்து செயல்படுகின்ற ஒரே காரணத்திற்காக சந்தேகப்படுவது அநீதியானது. சி.பி.. தேடுதல் வேட்டை நடத்தியதில் எங்களுக்கு கவலையில்லை என்றாலும், மக்கள் மத்தியில் ஏதாவது நடந்திருக்குமோ என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுமோ என்பதுதான் எங்களுக்கு கவலை அளிக்கிறது. அதற்காகவே யாருடைய தூண்டுதலும் இல்லாமல் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.

கனிமொழி எம்.பி.யுடன் நல்ல காரியங்களுக்காக இணைந்து இயங்குவதை மதிக்கிறோம். சென்னை சங்கமத்தை உருவாக்கியதில் அவரது தலைமை சிறப்பானது. தி.மு.. ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அவர் தமிழ் மையத்தில் அறங்காவலராக இணைந்தவர்.

அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகள் நடத்துவதில் எந்த தவறும் இல்லை.

.தி.மு.. ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடனும் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துவோம். அரசியல்வாதிகளில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பது என் வேலை அல்ல. குற்றவாளி என்று நீதிமன்றம் தண்டனை வழங்கியவருடன் இணைந்து பணியாற்றுவதுதான் தவறு.

சி.பி.. தேடுதலுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு நல்கினோம். அவர்களும் கண்ணியத்தோடு நடத்தினார்கள். 2004-ம் ஆண்டு முதல் எங்கள் கணக்கு விவரங்களை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களது சீரிய அணுகுமுறையிலும், அதைவிட எங்களது சரியான செயல்பாட்டிலும் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.

சி.பி.. தேடுதலை பயன்படுத்தி சோ, சுப்பிரமணியசாமி ஆகியோர் 2ஜி அலைக்கற்றை பணம் தமிழ் மையம் வழியாக விடுதலைப்புலிகளுக்கு சென்றிருக்கலாம் என்பது போல பேசி வருகிறார்கள். அவர்களை சட்டரீதியாக எதிர்கொள்வோம்.

விடுதலைப்புலிகளுக்கு ஒருபோதும் நிதி வழங்கியது இல்லை. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஆதரவு குரல் கொடுத்திருக்கிறேன். தமிழ் மக்களுக்கான எங்களது நற்பணிகளை முடக்க திட்டமிட்டு செய்துவரும் இதுபோன்ற பிரசாரங்கள், எங்கள் பணிகளை மேலும் வலுப்படுத்துமேயன்றி தளர்த்தாது.

தமிழ் மையத்தின் நிலையான நிதி ரூ.1 கோடி. மற்ற சொத்துக்கள் எதுவும் கிடையாது. மக்களின் நன்மதிப்பு தான் எங்கள் சொத்து. முதல் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடந்தபோது பலரும் உதவியது போல கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனமும் ரூ.3 லட்சம் வழங்கியிருக்கிறார்கள்’’என்று தெரிவித்தார்.

0 Responses to விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கவில்லை பாதிரியார் ஜெகத் கஸ்பார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com