தலைமன்னார் பிரதான வீதியின் வங்காலைப்பாடு கடற்பகுதியில் கடற்தொழிலுக்குச்சென்ற மீனவர் ஒருவரின் வலைத்தொகுதியில் மிகவும் பெரிய இரண்டு கடற்பண்டிகள் சிக்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.அவற்றை கரைக்கு கொண்டுவந்த மீனவர் ஒருவரை அப்பகுதியில் உள்ள கடற்படையினர் கைது செய்து மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளர்.
குறித்த மீனவரை மன்னார் பொலிஸார் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது மீனவரை இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார்.
நேற்று(15-12) மதியம் 2-30 மணியளவில் தொழிலுக்குச்சென்ற மீனவர் ஒருவர் தான் ஏற்கனவே கடலில் போட்டிருந்த வலையினை பரிசோதித்த போது 2 பிரமாண்டமான கடற்பண்டிகள் வலையில் சிக்கி இறந்து கிடப்பதைக்கான்டுள்ளார். பின் அவற்றை கடற்கரைக்கு கொண்டுவந்துள்ளார்.
இதன்போதே கடற்படையினர் மன்னார் பொலிஸாருக்க தகவல் வழங்க பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மீனவரை கைது செய்துள்ளதோடு குறித்த 2 கடற்பண்டிகளையும் மீட்டு மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். கடற்பண்டிகள் சோடியாக அகப்பட்டு உள்ளமையை அறிந்த ஆயிரக்கணக்கான ; மக்கள் மன்னார் பொலிஸ் ;நிலையத்திற்கு முன் கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்த கடற்பண்டிகளைப் பார்வையிட்டுள்ளனர்.
மேற்படி இரண்டு; கடற்பண்டிகளும் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக கொழும்பிற்கு ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.





0 Responses to மன்னாரில் பெரிய இரண்டு கடற்பண்டிகள் வலையில் சிக்கின (படங்கள் இணைப்பு)