அன்னாரின் இறுதிக்கிரியைகளின்போது இந்து மதக்குருக்கள், ஆலயக் குருக்கள், சமூக மட்டத் தலைவர்கள், கிராம மக்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள் என ஐந்நூறுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.
மானிப்பாய் பகுதி பொலிஸ், இராணுவ அதிகாரிகளும் இந்தக் கிரியை நிகழ்வின்போது கலந்துகொண்டனர். நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் உள்ளம் உருக தமது கண்ணீர் அஞ்சலிகளைச் செலுத்தினர்.
கிரியை இடம்பெற்ற குருக்களின் இல்லம் தொடக்கம் கரைச்சி மயானம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த சனிக்கிழமை இரவு முகமூடி அணிந்த ஆயுததாரிகள் குருக்களின் வீட்டில் நுழைந்து அவரையும் அவரது இரு மகன்மாரையும் சுட்டும் வெட்டியும் காயப்படுத்தினார்கள்.
காயமடைந்த மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்நாள் இரவு குருக்கள் உயிரிழந்தார்.
சங்கானைச் சம்பவத்துக்கு மன்னிப்பு கோருகிறார் தளபதி
சங்கானையில் இடம்பெற்ற சம்பவத்துக்காகப் படை யினர் சார்பில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இத்தகைய சம்பவம் எதிர்காலத்தில் இடம்பெற இடமளிக்காத வகையில் செயற்படுவோம் என உறுதி கூறுகிறேன் என யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் ""குஷி' சமாதான விருதைப் பெற்றமைக்காக அவரைக் கௌரவிக்கும் வகையில் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பேசுகையில் அவர் மேற்கண்டவாறு மன்னிப்பு கோரினார்.
இந்த நிகழ்வில் அவர் பேசுகையில் கூறியதாவது:
சங்கானையில் இடம்பெற்ற சம்பவத்தையிட்டு வருத்தம் அடைந்துள்ளோம். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருக்க ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், யாழ். ஆயர் அதி.வண. தோமஸ் சௌந்தரநாயகம், தென்னிந்திய திருச்சபை பேராயர் அதி.வண. டானியல் தியாகராசா உட்படப் பலர் உரையாற்றினர்.



0 Responses to குருக்களின் சம்பவத்திற்கு யாழ். தளபதி மன்னிப்பு