Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பல்வேறு சர்ச்சைகளின் பின்னர் பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஷ், தமது இலங்கைக்கான விஜயத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், வொசிங்கடனில் உள்ள இராங்க திணைக்களத்துக்கு அனுப்பி ரகசிய தகவல்கள் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தினால் நேற்றைய தினம் வெளிப்படுத்தப்பட்டதன் பின்னர், லியாம் பொக்ஸ் இந்த விஜயத்தை கைவிட்டுள்ளதாக கார்டியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

லியாம் பொக்ஸின் இலங்கை விஜயம் தொடர்பில், பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் வில்லியம் ஹேக் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் விஜயம் தொடர்பில் நேற்றைய தினம் வெளிநாட்டு அமைச்சர் வில்லியம் ஹேக்குடன், லியாம் பொக்ஸ் பேச்சு நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்துக்கு பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு வெளிப்படுத்திய எதிர்ப்பைத் தொடர்ந்து, அவர் இந்த விஜயத்தை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவார்த்த நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக அவர் நாளைய தினம் இலங்கை வரவிருந்தார்.

எவ்வாறாயினும் லியாம் பொக்ஸின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நீடிக்கும் நோக்கில், இலங்கை விஜயம் கைவிடப்பட்டுள்ளதாக, லியாம் பொக்ஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அடுத்த ஆண்டும் மீண்டும் லியாம் பொக்ஸ் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவரது பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீதான யுத்தக் குற்றச் சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதில், பிரித்தானியா தீவிரமாக இருப்பதாக கார்ட்டியன் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில், பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் இலங்கையுடன் நெருங்கிய உறவை பேணுவது, பிரித்தானியாவின் வெளிநாட்டு கொள்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சு கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே குறித்த விஜயத்தை கைவிடுவதற்கான அழுத்தம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to லியாம் பொக்ஸின் இலங்கை விஜயம் ரத்து - மேலும் இலங்கைக்கு அவமானம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com