Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யேர்மனி போகும் மாநகரில் இன்று 18.12.2010 தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் மண்டபம் நிறைந்த மக்களுடன் மிக எழுச்சியாக முன்னெடுக்கப் பட்டது. தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நினைவு வணக்க நிகழ்வு அகவணக்கம் மலர்வணக்கம் சுடர்வணக்கத்துடன் தொடர்ந்தது.

சிறப்பாக இன் நிகழ்வில் விடுதலைக்கானங்க ள் எழுச்சி நடனங்கள் முழுமையாக இளையோர்களால் நெறிப்படுத்தப்பட்டது மக்களின் பாராட்டுக்களைப் பெற்றது. இத்துடன் சிறப்பு விருந்தினர்களாக இன் நிகழ்வில் இம்மானுவல் அடிகளாரும் ஊடகவியளாளர் கனகரவி அவர்களும் கலந்துகொன்டார்கள்.

இம்மானுவல் அடிகளார் தனது உரையில் குறிப்பாக யேர்மனி ஈழத்தமிழ் மக்கள் முன்னெடுக்கவேண்டிய அரசியல் வேலைத்திட்டத்தை வலியுறுத்தி உருவாகவிருக்கும் யேர்மன் ஈழத்தமிழர் மக்களவையை பலப்படுத்த இளையோர்களுக்கு அழைப்பு விடுத்து தனது உரையை ஆற்றினார்.

திரு கனகரவி அவர்கள் தனது உரையில் புலம்பெயர் மக்கள் தற்சமையம் எதிர்கொள்ளும் சூழ்நிலையைக் கருத்தில் கொன்டு எமது தேசியவிடுதலைப் போராட்டத்தின் வலிமையையும் அத்தோடு அதன் உறுதி தளராத அர்ப்பணிப்பையும் எடுத்துக் கூறியது குறிப்பிடத்தக்கது.









0 Responses to யேர்மனியில் தேசத்தின் குரல் அவர்களின் நினைவுநாள் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com