Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிரூட்ட வெளிநாடுகள் பலவும் முயற்சிக்கின்றதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய குற்றம் சாட்டுகின்றார்.

தற்போதைய நிலையில் முற்றாக முடக்கப்பட்டுள்ள புலிகள் இயக்கத்தின் புலம்பெயர் சக்திகளை ஒன்று திரட்டி விடுதலைப்புலிகளுக்கு மீண்டும் உயிரூட்ட பல வெளிநாடுகள் முயற்சிக்கின்றன என்று அவர் குறிப்பிடுகின்றார்.

கவசப்படையணியின் ஐம்பத்து ஐந்து வருடப் பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

என்னதான் வெளிநாட்டிலுள்ள விடுதலைப்புலி ஆதரவுச் சக்திகளை ஒன்று திரட்டி இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க யார் முயற்சித்தாலும் நாங்கள் அதற்கு இடமளிக்க மாட்டோம்.


இலங்கையிலிருந்து விடுதலைப்புலிகளை முற்றாகத் துடைத்தெறிந்ததை நிரந்தரமாக்கிக் கொள்வதாயின் இராணுவத்தினர் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும். அதற்கென அபிவிருத்திப் பணிகளில் இராணுவத்தினர் தங்களாலான பங்களிப்பை நல்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

1 Response to விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்ட நாம் இடமளிக்க மாட்டோம்: ஜகத் ஜயசூரிய

  1. skrulz Says:
  2. vidudalai puligal iyakam innum madindhu vidavilai meendum uyipatharku singalan thimir oru naal adangum atuvarai poruthirupom tamilane.,

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com