இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய உதவிகளை செய்யாதது கவலையளிப்பதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்த தமிழகத்தில் இரண்டு நாள் பயணமாக வந்துள்ள ராகுல், இன்று காலை சென்னை ஹோட்டல் தாஜ் கன்னிமாராவில் 120 ‘அறிவுஜீவிகளை’ (ண்ய்ற்ங்ப்ப்ங்ஸ்ரீற்ன்ஹப்ள்) சந்தித்தார். இதில் ஊடக, சட்ட, திரையுலக பிரமுகர்கள் (ராம நாராயணன், ஆர்.கே.செல்வமணி, நாசர், நடிகை ராதாவின் மகள் ஆகியோர் உள்பட) கலந்து கொண்டனர்.
அப்போது அவரிடம் இலங்கை விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில், இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய வசதிகளை செய்து தராதது கவலையளிப்பதாக உள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசில் உரியவர்களிடம் பேசி, இலங்கை அரசை தொடர்பு கொண்டு, தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்யப்படும்.
அறிவுஜீவிகளும் புத்திசாலிகளும் நேரடியாக அரசியலுக்கு வர மறுப்பது கவலையளிக்கிறது. அவர்கள் நேரடி அரசியலில் பங்கேற்று நாட்டுக்கு வழி காட்ட வேண்டும். அதிகளவில் இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டு வர நான் முயற்சித்து வருகிறேன் என்றார்.
ராகுலுக்கு கருப்புக் கொடி-சிவசேனாவினர் கைது:
இந் நிலையில் ராகுலின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் கருப்புக் கொடி போராட்டம் நடத்திய சிவசேனா கட்சியினர் கைது செய்யப்பட்டனர். காவி பயங்கரவாதம் குறித்த ராகுலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் அவரது உருவ பொம்மையையும் எரிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்துவிட்டனர்.



0 Responses to சிறீலங்காவின் போக்கு கவலை தருகிறதாம் இவருக்கு