கிளிநொச்சி நகரிலுள்ள தண்ணீர் தாங்கியில்தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பதுங்கிருந்தார் எனவும் அங்கேயே அவர் கொல்லப்பட்டதாகவும் விமல் வீரவன்ச கூறியிருக்கின்றார்.தற்போது இடிந்து போயுள்ள தண்ணீர்த்தாங்கியை யுத்த நினைவுச்சின்னமென கூறி அதனை பார்வைக்கு விட்டுள்ளனர்.
இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்த தண்ணீர்த்தாங்கிக்குள் இருந்தே தலைவர் பிரபாகரன் ஒழிந்திருந்து யுத்தத்தை வழிநடத்தினார் எனவும் அங்கு அவர் கூறியுள்ளார். மேலும் இடிந்து விழுந்துள்ள தண்ணீர்த்தாங்கியில் சிங்கள மொழியில் எழுதப்பட்டும் உள்ளது.
ஆனால் இந்த தண்ணீர்த்தாங்கி 2007ம் ஆண்டு 12ம் மாதம் 31ம் திகதி புலிகளின் கணனிப்பிரிவினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டமை கிளிநொச்சியில் உள்ள தமிழர்கள் எல்லோருக்கும் தெரியும். இதனை நேரில் பார்த்தவர்கள் பலர் இன்றைக்கும் உயிரோடு இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் சிங்கத்திற்கும் மனிதனுக்கும் பிறந்த வம்சம் என வரலாறு புனைந்தவர்கள் இப்போது தங்கள் அழிவுகளையும் அதனாலான இழிவுகளையும் மூடிமறைக்க கண்டதையெல்லாம் யுத்தச்சின்னமாக்குகிறார்கள்.
மற்றபடி யுத்தம் நடந்த பிரதேசத்தில் யுத்த சின்னமாக்குவதற்கு பொருத்தமானவை எதுவும் கிடையாது.



0 Responses to தண்ணீர் தாங்கியில் தேசியத் தலைவர் கூறுகிறார் விமல்