தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்குச் சென்று விட்டுத் திரும்பிய வேளையிலேயே நேற்றிரவு அவர் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தின் ஒருபகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டுள்ளார்.
அவரது சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கான பயணம் குறித்தும். அரசியலில் ஈடுபடும் ஆர்வம் குறித்தும் விசாரணைகள் நடாத்தப்பட்டதாக அறிய முடிகின்றது.
அரசாங்கத்தின் உயர்மட்டத்திலிருந்து தமக்கு வழங்கப்பட்டுள்ள பட்டியலில் அவரது பெயர் இருப்பதன் காரணமாகவே அவர் விசாரணைக்குட்படுத்தப்படுவதாகவும் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் தெரிவித்துள்ளனர்.



0 Responses to ஊடகவியலாளர் வித்தியாதரனிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை