அங்குள்ள மரத்தில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக வேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. மூன்று பேரின் அடையாளங்களை வைத்து பார்க்கும்போது அவர்கள் தந்தை மற்றும் மகன்களாக இருக்கலாம் என தெரிகிறது.
மேலும் அவர்களை பரிசோதித்தபோது திருப்பத்தூர் மார்க்கத்தில் இருந்து வந்ததற்கான பஸ் டிக்கெட், பைக் சாவி, மணி பர்சில் ரூ.5ம் இருந்தது. ஆகவே, இவர்கள் திருப்பத்தூர், வாணியம்பாடி அல்லது ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்கள் யார், எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



0 Responses to வேலூர் அருகே ஒரே மரத்தில் தொங்கி மூவர் தற்கொலை