Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு, மார்கழி மாதமானது துன்பங்களும் வலிகளும் நிறைந்த ஒருமாதமாகும். இற்றைக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், பூமியதிர்வினால் ஏற்படுத்தபட்ட ஆழிப்பேரலையானது தென்கிழக்காசியாவிலேயே மிகவும் மோசமானதாக அமைந்திருந்தது.

இந்த அனர்த்தத்தின்போது மொத்தமாக இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். தமிழீழத்தில் மட்டும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்திருந்தனர்.

அத்தோடு ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயரவேண்டி ஏற்பட்டது. இம்மக்கள் உணவுத் தட்டுப்பாடு, மருந்துப் பற்றாகுறை, பாதுகாப்பு இன்மை போன்ற பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.

இந்த துன்பியல் நிகழ்வானது கனடாவாழ் தமிழ் மக்களின் நினைவுகளை இன்னும் ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கின்றது. இதற்கு முக்கியகாரணம் ஆழிபேரலையால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத தமிழ் மக்களின் நிலைமை அப்படியே மாறாமல் இன்றும் இருப்பதாகும்.

இன்றும் ஆயிரக்கணக்கில் தமிழ்மக்கள் முள்வேலிக்கம்பியால் அடைக்கப்பட்ட தடுப்பு முகாங்களுக்குள் அத்தியாவசிய வசதிகள் இன்றி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தடுத்துவைக்கபட்டுள்ளனர்.

அத்தோடு உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமிழ்மக்களின் வாழ்விடங்கள் இலங்கை ராணுவத்தாலும் சிங்கள குடும்பங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.தமிழ் மக்கள் தம் பூர்வீக நிலங்களை இழந்து தடுப்பு முகாங்களிலும் மரங்களின்கீழும் வாடிக்கொண்டிருக்கும் அதேநேரம், சிங்கள அரசானது திட்டமிட்டமுறையில் சிங்கள குடியேற்றங்களை செய்துவருகின்றது.

இதற்கு பலவந்தமாக தமிழ் மக்களை விரட்டியடித்தல், பயமுறுத்துதல், தமிழ்பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துதல் போன்ற அருவருக்கத்தக்க வழிமுறைகளை இலங்கை அரசும் அதன் இராணுவமும் கைக்கொண்டு வருகின்றன.

சிலகாலங்களாக உலகெங்கும் இருக்கும் மனித உரிமை அமைப்புகள், இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்களை கண்டித்து பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

கனடாவாழ் தமிழ் மக்கள், ஆழிப்பேரலையால் பலிகொள்ளபட்டவர்களை நினைவுகூரும் அதேவேளை, தமிழ்மக்களின் நிலைமையானது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றதென்பதையும், தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வை பெற்றுத்தரும் தார்மீக கடப்பாடு சர்வதேச சமூகத்திற்கு உள்ளதென்பதையும் இத்தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் மார்கழி 26 அன்று ஆழிப்பேரலையால் காவுகொள்ளபட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை கனடாவாழ் தமிழ்மக்கள் நடத்திவருகின்றனர்.

இந்த ஆண்டு, இந்த நிகழ்வின் அங்கமாக, தமிழ் இளையோர் அமைப்பானது உணவு சேகரித்தல் நிகழ்வை ஒழுங்குசெய்துள்ளது. மார்கழி 23, 2010 முதல் தை 2, 2011 வரை இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுக்கு கனடாவாழ் தமிழ் மக்களின் பங்களிப்பை இளையோர் அமைப்பு எதிர்பார்க்கின்றது.

பழுதடையாத, தகரம் மற்றும் பைகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை வழங்குமாறு கனடாவாழ் தமிழ் மக்களை இளையோர் அமைப்பு கேட்டுக்கொள்கிறது.

கடந்தகால துயரங்களை நினைவுகூரும் அதேவளை, இவற்றில் இருந்து மீண்டெழுந்து, உறுதியுடனும், உண்மையுடனும் நாம் அனைவரும் இணைந்து தமிழ் மக்களுக்கான நீதியை பெறக் கரம்கோர்ப்போம்.

TYO Media - Canada

0 Responses to சுனாமி அனர்த்தத்தின் ஆறாம் ஆண்டு நினைவுகூரல்: கனடா தமிழ் இளையோர் அமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com