Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழ் மகனாகிய சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்புலிகளுக்கு உதவினார் என்று அமெரிக்காவினால் குற்றம் சாட்டப்பட்டு 2006ம் ஆண்டு கனடாவில் கைதுசெய்யப்பட்டார்.

21-08-2006 இல் அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க கனேடிய காவல் துறையினர் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் சுரேஷை கனடாவில் கைது செய்தார்கள். தடை செய்யப்பட்ட ஓர் பயங்கரவாத அமைப்புக்கு (தமிழீழ விடுதலைப் புலிகள்) உதவினார் என்பதே அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும்.

கூடவே, கணனி போன்ற உபகரணங்களை வாங்கிச்சென்று யாருக்கு வழங்கினார் என்பது தொடர்பாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இவர் மீது குற்றம் சுமத்தப்பட்ட காலப்பகுதியில் கனடாவிலோ, இலங்கையிலோ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டிருக்கவில்லை. இருந்தும் கனடாவில் இவரது பிணை மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதி இவரது நன்னடத்தையையும் கல்வித்தகமைகளையும் கவனத்தில் கொண்டு இவரைப் பிணையில் வெளியே செல்ல அனுமதித்தார். பிணையில் வெளியே வந்த சுரேஷ் தன்னை அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதை எதிர்த்து வழக்கை நடத்திக்கொண்டிருந்தார்.

கடந்த செப்ரெம்பர் 20ம் திகதி இவரை ரொறன்ரோ நீதிமன்றில் சரணடையுமாறு என்ற அறிவிப்பைத் தொடர்ந்து சரணடைந்த சுரேஷை 4 மணி நேரம் விவாதத்திற்கு உள்ளாக்கினர்.

எனினும் இவரை நாடுகடத்தலுக்கான முடிவு எந்நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என ரொறன்ரோ நீதிமன்றம் அறிவித்துள்ளதையடுத்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அமெரிக்க நாடுகடத்தலுக்கான உத்தரவை கனடிய நீதிமன்றம் இன்று மீள்உறுதி செய்துள்ளது.

மேலும் சுரேஷின் மேன்முறையீடு மீதான தீர்ப்பு இன்று காலை அறிவிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


0 Responses to சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா மீண்டும் சிறைத்தண்டனை (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com