யாருக்கும் கைலாகு கொடுக்கலாம் அதற்கும் முறைகள் உண்டு. பார்ப்பவர்கள் அசிங்கப்பட வைக்கக்கூடாது. நீங்கள் ஒரு பெண் என்பதையும் ஒரு படித்த அறிவாழி என்பதையும் அறிவோம். அதற்கேற்ப இனியாவது நடந்து கொள்ளுங்கள் தமிழர்கள் பெருமையடைவார்கள்.
இவர் தற்போது புலம் பெயர் சமூகத்தின் மீதி கையை திருப்பியுள்ளார். புலம்பெயர் உறவுகள் தங்கள் வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும் என்ற பாணியில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

உதவி வழங்கியவர்கள் தங்கள் கடமைகளை வாங்கும் சம்பளத்திற்கேற்ப கடமையாற்றி சென்றார்கள். ஆனால் எல்லோரையும் விஞ்சியவர் நீங்கள் என்பதை வன்னிமக்கள் நன்கு அறிவார்கள்.
நீங்கள் வாங்கும் போணசிற்குமல்லவா வேலை செய்ய வேண்டும். வன்னி மக்களுக்கு சேவையாற்றுவதற்காக ஐ.நா நிறுவனத்தினரால் முல்லை மாவட்ட செயலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எத்தனை லப்ரொப் கணனிகள் மற்றும் தளபாள உபகரணங்கள் உட்பட எவ்வளவு பொருட்களை ஓமந்தை இராணுவச் சோதனைச்சாவடியில் வைத்து நீங்கள் இராணுவத்திற்கு அன்பளிப்பாக வழங்கினீர்கள் என்பதை நாமறிவோம்.
ஏன் இப்படி என கேட்டதற்கு இவற்றை கொடுத்தால்தான் சோதனைச்சாவடியில் சிக்கலில்லாமல் போகலாம் என நீங்கள் சொல்லிய சாட்டுக்களையும் தமிழ்மக்கள் அறிவார்கள் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது.
அதுமட்டுமல்லாமல் புலம் பெயர் உறவுகளுக்கு பாடம் நடத்த முனையக்கூடாது. மாவட்டத்திற்கு அரச அதிபர் என்ற உடனே நீங்கள்தான் எல்லாம் என்ற ரீதியில் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது.
புலம்பெயர் உறவுகள் மட்டும் 10 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல அவர்கள் நாட்டிற்காக எத்தனையோ மாவீரா்களை கொடுத்த குடும்பங்கள், போராளி குடும்பங்கள், ஆதரவாளர்கள் என்று இங்கிருந்து போனவர்கள்தான் அவர்கள்.
அவர்கள்தான் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நிதிவளங்களும்கூட இவ்வாறானவர்கள் இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதை நாம் அறிவோம். மகிந்தவை உரையாற்ற விடாமல் திருப்பியனுப்பியது உங்களுக்கு ஆத்திரமோ?
நீங்களல்ல எவராலுமே இந்த விடுதலைப்பேராட்ட வடிவங்களையோ இறுதி இலட்சியத்தையோ நசுக்கிவிடமுடியாது.
இதுபோலவே முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லை ஆதார வைத்தியசாலை வளாகத்திற்கு அருகில் உங்கள் வதிவிடத்தில் வைத்து அதிகாலை தூக்கம் கலையும் முன்பே சிறீலங்கா இராணுவத்தினரின் ஆட்லறி தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்திருந்தீர்கள்.
அதன்போது பச்சிளம் குழந்தையொன்றும் கோரப்பலியெடுக்கப்பட்டு மேலும் நால்வர் காயமடைந்திருந்தனர் அப்போது கருத்து தெரிவித்த நீங்கள்; சிறீலங்காவின் மற்றுமொரு தாக்குதல் முல்லை ஆதார வைத்தியசாலைமீது மேற்கொள்ளப்பட்டதாகவும் தற்செயலாக வைத்தியசாலையில் இருந்த நோயாளிகளுக்கு பாரிய உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் பாதுகாப்பு தேடி சிதறி ஓடியதாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருதீர்கள்.
இப்போ யாழ் அரச அதிபர். அதுமட்டுமன்றி சிறீலங்காவின் அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு சாட்சியம் கொடுத்திருந்தீர்கள்;. சிறீலங்கா இராணுவத்தினரின் தாக்குதலினால் மக்கள் பாதிப்படையவில்லை என்றும் விடுதலைப்புலிகளே மக்களை துப்பாக்கியால் சுட்டதாகவும் திருவாய் மலர்ந்திருந்தீர்கள்.
ஆனால் உங்கள் கருத்தின்படி எந்த மக்களுமே இறுதிப்போரின்போது இராணுவத்தின் தாக்குதல்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. அதன்படியே பார்த்தால் 2008ஆம் ஆண்டு ஆவணிமாதம் 7ஆம் திகதி அதிகாலை வைத்தியசாலை வளாகத்தில் நடாத்தப்பட்ட தாக்குதலை நீங்கள் மறந்தீர்களா? அல்லது மறக்கவைக்கப்பட்டீர்களா?
'சிலரை சிலகாலமும் பலரை பலகாலமும்; ஏமாற்றலாம் ஆனால் எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது' இதனை நீங்கள் புரிந்து வைத்திருக்கவேண்டும்.
இது உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் நல்லதாகவே இருக்கும் என நாம் கருதுகின்றோம்.
எங்களைப்பற்றி எவருக்குமே தெரியாது நாம் எதையும் செய்யலாம், சொல்லலாம் என்றில்லாமல் எல்லோரும் எங்களையே பார்ப்பார்கள், நோக்குவார்கள் என்ற சிந்தனை நம்மிடம் இருக்குமேயானால் நாம் தொடர்ந்தும் நல்லவர்களாகவே நடுநிலமைவாதிகளாகவே இருக்கலாம் என்பது முன்னோர் வாக்கு. இவர்கள் மக்கள் எல்லோரும் எல்லாவற்றையும் மறந்திருப்பார்கள் நாம் இனி புதிய சூழலுக்குள் வந்திருப்பதாக உணர்வதன் வெளிப்பாடே இது எனக்கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்திலிருந்துசக்கரவர்த்திஈழநேசன் sakkaravarththi@gmail.com



0 Responses to யார் இந்த யாழ்ப்பாண அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்