Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் இயங்குகின்ற தமிழ் இராணுவக் குழுக்களின் செயற்பாடுகளில் இராணுவத்தினரை தலையிட வேண்டாம் என, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே உத்தரவிட்டதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இடப்பட்டு, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு இலங்கையில் உள்ள தூதரகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை நேற்றையதினம் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் படி, துணை இராணுவக் குழுக்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் பெறுமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து வந்த கருணா குழுவினர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் .பி.டி.பி போன்ற துணை இராணுவக் குழுக்களுக்கு அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தற்போது அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக உள்ள விநாயகமூர்த்தி முரளிதரன், இந்த ஆவணம் அனுப்பப்பட்ட காலப்பகுதியில் அதிக அளவிலான கப்பம் பெற்றதுடன், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் விக்கிலீக்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினருக்காக கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தம்மிடம் இருந்த போராளிகளை கொண்டு பாலியல் தொழிலையும் நடத்தியதாகவும் விக்கிலீக்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டக்ளஸ் தேவானந்தாவின் ஆயுதக்குழுவினர் இலங்கைப் படையினருடன் இணைந்து கொலைகளிலும் ஈடுபட்டனர் என்றும் விக்கிலீக்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.

0 Responses to டக்ளஸ், கருணாவே வடக்குகிழக்கில் வர்த்தகர்களிடம் கப்பம் பெற்றனர்: விக்கிலீக்ஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com