Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொன்சேகா தலைமையிலான அரசு அமைந்திருக்கும் பட்சத்தில் விரைவான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டெனிஸ் இருந்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டெனிஸ் கடந்த ஜனவரி 22 ஆம் திகதி இலங்கை நிலைவரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைத்திருந்த ஆவணம் ஒன்றில் இருந்து இது அம்பலமாகியுள்ளது.

விக்கிலீக்ஸ் இணையத்தளம் இந்த ஆவணத்தை வெளிவிட்டு உள்ளது. இதில் பொன்சேகாவுக்கும், பொன்சேகாவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து எழுதி இருக்கின்றார் அமெரிக்க தூதுவர்.

மனித உரிமைகள், அகதிகள், அரசியல் இணக்கப்பாடு, யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறல், அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆகியன தொடர்பாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதிகளை தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொன்சேகா வழங்கி உள்ளார் என்றும் பொன்சேகாவின் அரசு ஆட்சிக்கு வந்தால் மஹிந்த ராஜபக்ச அரசை விட இவ்விடயங்களில் மிகவும் வேகமாக செயல்படும் என எதிர்பார்க்க முடியும் என்றும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பொன்சேகா தலைமையில் அரசு அமைந்திருக்க வேண்டும்: பற்றீசியா புட்டெனிஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com