Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் தொழில்வாய்ப்பு வழங்குமாறு கோரி நேற்று அப்பிரதேச இளைஞர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலின் போது அம்பாந்தோட்டைத் துறைமுக தொழில் வாய்ப்புகளில் அப்பிரதேச இளைஞர், யுவதிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டு தற்போதைக்கு ஒரு மாதம் கடந்து விட்ட நிலையிலும் அப்பிரதேச இளைஞர் யுவதிகளில் ஒருவருக்குத் தானும் இதுவரை தொழில்வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாவும், பிரதேச இளைஞர், யுவதிகளுக்குத் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடனும் நேற்றைய ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் பெருமளவானோர் கலந்து கொண்டதாக எமது தென்னிலங்கைச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.



0 Responses to சிங்கத்தின் குகைக்குள் ஆரம்பித்துள்ளதா சலசலப்பு? (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com