Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டக்டஸ் தேவானந்தாவை கைது செய்யக்கோரி வழக்கறிஞர் புகழேந்தி செய்துள்ள மனுவை, விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றது.

25 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் இலங்கை அமைச்சர் டக்டஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் இலங்கைக்கு தப்பிச் சென்றார். இதுதொடர்பான வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் டக்டஸ் தேவானந்தாவை கைது செய்யக்கோரி வழக்கறிஞர் புகழேந்தி மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

0 Responses to டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி மனு: விசாரணைக்கு ஏற்றது ஐகோர்ட்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com