எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல்களில் தமிழ்க் கட்சிகள் ஓரணியில் நிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலான பொதுமக்களிடையேயும் புத்திஜீவிகள் மற்றும் சமூகப் பொறுப்புமிக்கோரிடமும் இருப்பதையிட்டு மகிழ்வடைகிறேன்.
இவ்வாண்டில் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பாக எமது கட்சி மேலும் பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளுடன் முதற்கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை சாதகமாக முடிவடைந்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் இம்மாதம் முதலாம் திகதி கொழும்பில் நடைபெற்றது.
நாம் பல்வேறு அணிகளாக பிரிந்து நிற்பதால் அரசுக்கு அது சாதகமாகிவிடும். எனவே எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பரந்துபட்ட முன்னணிக்கு சாதகமாகத் தயாராக விருப்பம் கொண்டுள்ளதாக நாம் அறிந்துகொண்டோம். அரசாங்கத் தரப்பில் இணைவதற்கு விருப்பமானவர்களுக்கு நாம் தடையாக இருப்பதில்லை. மாறாக எதிரணியில் போட்டியிட விரும்புவோரை இணைத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.
அரசுக்கு சாதகமாக அமையாதவகையில் கூட்டணியொன்றை அமைத்து எதிர்காலத்தில் எமது தீர்மானங்களை நிறைவேற்றவுள்ளோம். அது தொடர்பிலான எமது இறுதி முடிவை விரைவில் ஊடகங்களுக்கும் மக்களுக்கும் வழங்குவோம்.



0 Responses to தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் களம்: சிவாஜிலிங்கம்