இலங்கையில் பொது இடங்களில் இளம் பெண்கள் பலர் குட்டை பாவாடை அணிந்து நடமாடுவதற்கு பலதரப்பு மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, கலாசாரத்துறை அமைச்சகம் இந்த விஷயத்தில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.சுற்றுலா தலங்களுக்கு குறிப்பாக புத்த மடாலயங்களை பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், கண்ணியமான உடைகளை அணியும் படி அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இதை முறைப்படி யாரும் பின்பற்றவில்லை.
சமீபத்தில் வெளிநாட்டு பாப் இசை பாடகர் ஒருவர், ஆபாச உடை அணிந்த நடன மங்கைகள் புத்தர் சிலையை சுற்றி நடனமாடுவது போன்ற காட்சியை படமாக்கியிருந்தார். இதற்காக அவருக்கு இலங்கை விசா மறுக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் குட்டை பாவாடைகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆராயும் படி கலாசாரத்துறை அமைச்சர் ஏகநாயகே, சிறப்பு கமிட்டிக்கு உத்தரவிட்டுள்ளார்.
கலாசாரத்துறை செயலர் நிர்மல் ரூபசிங்கே, குட்டை பாவாடைகளுக்கு தடை விதிப்பது குறித்த உத்தரவு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.



0 Responses to குட்டை பாவாடைக்கு தடை - இலங்கை அரசு அதிரடி