Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 1 ஆம் நாள் காணாமல்போன முச்சக்கர வண்டி சாரதி எஸ் கோபிநாத் உரும்பிராயில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் பௌத்த ஆலயம் ஒன்றை படையினர் அமைப்பது தொடர்பில் தனது நண்பர்களுடன் கருத்து பரிமாறலில் ஈடுபட்டிருந்தவர் என அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களை கூறுபவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடும் அரசின் நடவடிக்கைக்கு அவர் உள்ளாகியிருக்கலாம் என அவரின் நண்பர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மானிப்பாய் சிலகுல வீதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கோபிநாத் (27) சிறீலங்கா படையினராலும், .பி.டி.பி துணை இராணுவக்குழுவினராலும் கடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடவேண்டும் என சிறீலங்கா அரசு கொண்டுவத்த சட்டம் தொடர்பில் கருத்துக் கூறிய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த படுகொலைகளில் சிறீலங்கா படையினரின் புலனாய்வுத்துறையினருடன் இணைந்து செயற்பட்டுவரும் .பி.டி.பி துணை இராணுவக்குழு, சிவாஜிலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிப்பது நாம் அறிந்தவையே.

0 Responses to பௌத்த விகாரை தொடர்பில் கருத்து கூறியதால் முச்சக்கரவண்டி சாரதி கடத்தப்பட்டார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com