ஐரோப்பிய நாடுகளில் ஒன்றேனும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு கோரினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப்புலிகள் மீதான தடையை தொடரமுடியாது என்ற சட்டஏற்பாடு உள்ளதாகவும் அதன்படி ஐரோப்பிய வாழ் தமிழர்கள் தமது உச்சமட்ட அரசியல் அழுத்தத்தை பிரயோகித்து இத்தடையை நீக்கமுடியும் எனவும் பிரான்சு தமிழர் நடுவ செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
சமீபத்தில் மறைந்த ஊடகவியாலாளர் சுப்பிரமணியம் சிவநாயகம் ஐயா அவர்களுக்கான அஞ்சலியுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள், பொது அமைப்பு பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் என பன்முகத் தளத்தில் இருந்து பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆறுமாதத்திற்கு ஒரு தடவை, ஐரோப்பிய ஒன்றியத்தினால் புதுப்பிக்கப்பட்டு வரும் பயங்கரவாத பட்டியல் தொடர்பிலான முடிவினை கருத்தில் கொண்டு, எதிர்வரும் மே மாதத்திற்கு முன்னர், இந்த வெகுசன போராட்டத்தின் மக்கள் கையொப்பங்களை ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒப்படைப்பதென்றும், தொடர்ச்சியாக பல்வேறு வழிகளிலும் இதனை முன்னெடுப்பதென்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விடுதலைப் புலிகளின் உயர் அரசியல் பீடத்தால் முன்வைக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தங்களது முழுமையான உறுதுணையை வழங்குவதோடு, அதனுடைய செயற்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதெனவும் எடுத்துரைக்கப்பட்டது.






0 Responses to தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய தடை நீக்கத்திற்கான போராட்டம்: பிரான்சு தமிழர் நடுவம் முன்னெடுப்பு (காணொளி, படங்கள் இணைப்பு)