Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்.பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தது மட்டுமல்லாமல் பிரதேச மீனவர்களின் வலைகள் உட்பட கடற்றொழில் உபகரணங்களை சேதப்படுத்திய இந்திய தமிழக மீனவர்கள் 106பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் இன்று மதியம் பருத்துறைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இது தொடர்பாக பிரதேச மீனவர்கள் பொலிஸ் மற்றும் கடற்படைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து கடற்படைபொலிஸ் மற்றும் பிரதேச மீனவர்கள் இணைந்து பிற்பகல் 3மணிதொடக்கம் மாலை7 மணிவரைக்கும் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் தொண்டைமானாறு தொடக்கம் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் வைத்து 106 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் பயன்படுத்திய 18ஆழ்கடல் மீன்பிடிப்படகுகளும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழகத்தில் நாகப்பட்டினம்காரைக்கால் பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களென பருத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களனைவரும் தற்போது பருத்துறை பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

1 Response to தமிழக மீனவர்கள் 106பேர் பருத்துறைக் கடற்பரப்பில் கைது

  1. யாருக்கும் கேட்காத பருத்தித்துறை மீனவர்களின் குரல்! (காணொளி இணைப்பு)
    இந்திய மீனவரால் நஷ்டம் பருத்தித்துறை மீனவர்களின் குரல்http://www.youtube.com/watch?v=I9eUr_nvYX8
    பருத்தித்துறை தமிழ் மினவர்கள் இலங்கை அரசு அதரவு தமிழர்கள
    இந்த வீடியோ பதிவில் இந்திய மிளவர்களை குறை குறுவது வேடிக்கை யாக உள்ளது

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com