Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் மறைவையொட்டி வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மற்றும் பறக்கவிடப்பட்டிருந்த கறுப்புக் கொடிகள் அனைத்தினையும் அங்கு திடீரென வந்த படையினர் அகற்றியதன் காரணமாக வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் பதற்றம் நிலவுதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு நேற்று இரவு சுமார் 14 இளைஞர்களை புலனாய்வுப் பிரிவினர் கடத்தியுள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. கடத்தப்பட்ட சில இளைஞர்களே மரங்களில் ஏறி கறுப்புக்கொடிகளைக் கட்டியதாக இராணுவத்தினர் நம்புகின்றனராம்.

இதில் சில இளைஞர்கள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், மேலும் சிலரை இராணுவத்தினர் தடுத்துவைத்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதனைச் சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை.

0 Responses to வல்வையில் 14 இளைஞர்கள் கடத்தல்: பிரதேசத்தில் பதற்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com