Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தில் மண்டையோட்டுத் தொகுதி

பதிந்தவர்: தம்பியன் 03 February 2011

யாழ்ப்பாணக் கோட்டையை அண்டிய பிரதேசத்தில் மனித மண்டையோட்டுத் தொகுதிகளைக் கொண்ட புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அது இன்னொரு செம்மணியாக இருக்கலாம் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் கோட்டையை அண்மித்த பகுதிகளில் தொல்பொருளியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தவர்களே குறித்த மண்டையோட்டுப் புதைகுழியைக் கண்டுபிடித்துள்ளனர். யாழ்ப்பாணத்தின் கோட்டைக்கு அண்மித்த முற்றவெளி போன்ற பகுதியிலேயே மண்டையோடுகள் அடங்கிய புதைகுழி காணப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மேலும் மண்டையோடுகள் காணப்படலாம் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.

மண்டையோட்டுப் புதைகுழி தொடர்பில் அதனைக் கண்டுபிடித்த தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகள் யாழ்.பொலிசாருக்கு அறிவித்துள்ளனர். மேலும் கொழும்பில் உள்ள தொல்பொருளியல் திணைக்கள பிரதான அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to யாழ்ப்பாணத்தில் மண்டையோட்டுத் தொகுதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com