புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பவித்ரா தங்கும் விடுதியில் நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும்.
அதற்கான பிரச்சாரங்களை நாம் தமிழர் கட்சியினர் செய்ய வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டதுடன், முதன் முறையாக நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த கரு.காளிமுத்து இன்று முதல் மாவட்ட தலைவர் என்று பொறுப்புக்கு வருகிறார் அறிவிக்கப்பட்டது.
மேலும் மாவட்ட அமைப்பாளர்களாக சத்யமூர்த்தி, நார்த்தமலை சிவா, துரைப்பாண்டியன் ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல இனிமேல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தலைவர், அமைப்பாளர், பொறுப்பாளர்கள் அமைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்து வெளியே வந்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் நம்மிடையே, விரைவில் நாம் தமிழர் கட்சியின் தலைவராகிறார் சீமான் என்று தெரிவித்தனர்.



0 Responses to தலைவராகிறார் சீமான்!