Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்புறை ஆற்றியுள்ளார்.

இதன் போது புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் வெளியில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக பான் கீ மூனுக்கு எதிரான பதாதைகள் ஒட்டிய வாகனங்கள் சுற்றித்திரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பான் கீ மூனின் உருவம் பொறிக்கப்பட்டு, அதன் கீழ் தாம் இரண்டாம் தவணை பதவிக்காக போட்டியிடுவதாகவும், இலங்கையில் 40 000 பொது மக்கள் கொள்ளப்பட்டமை தொடர்பில் தாம் எதனையும் செய்யவில்லை எனவும், நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் எனும் வாசகங்கள் அடங்கிய சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளுடன் இந்த ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

0 Responses to மூனுக்கு எதிராக புலம் பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com