Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லங்கா நியூஸ் இணையத்தள அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி பொலிஸ் மா அதிபர் என்பதாக பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள் சிலர் இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்கள்.

லங்கா நியூஸ் இணையத்தள அலுவலகத்திற்குத் தீமூட்டிய கஜபா படைப்பிரிவின் சிப்பாய்கள் தப்பிச் செல்லப் போதுமான பாதுகாப்பை வழங்கியது பொலிஸ் மா அதிபர் என்பதாக அவர்கள் ஆதாரபூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ளார்கள்.

அதற்காக அவர் நுகேகொடைப் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னக்கோனின் உதவியைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் குறித்த அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் நல்லபெயர் எடுப்பதற்காக அவரின் வழிகாட்டலிலேயே இவர்கள் செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களோடு யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிற்கும் இத்தாக்குதலில் தொடர்பிருப்பதாக கூறப்படுகின்றது.

தாக்குதலை மேற்கொண்ட கஜபா படைப்பிரிவு சிப்பாய்களை இரகசியமாக கொழும்புக்கு அனுப்பி வைத்தது அவர்தான் என்று தெரிய வருகின்றது.

0 Responses to "லங்கா ஈ நியூஸ்" தாக்குதலின் பிரதான சூத்திரதாரி பொலிஸ் மா அதிபர்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com