Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகளின் நிழல் பாராளுமன்றத்தில் இன்னும் படிந்துள்ளதாக அமைச்சர் ஜகத் புஷ்பகுமார இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

வரி விதிப்புகள் சம்பந்தமாக 16 மசோதாக்கள் மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் புஷ்பகுமார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரது குற்றச்சாட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரனை நோக்கியதாகவே அமைந்திருந்தது. அவரை நோக்கியே விடுதலைப் புலிகளின் நிழலாகச் செயற்படுவதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் நிழல்கள் இன்னும் பாராளுமன்றத்தில் செயற்படுவதாகவும், சர்வதேச மட்டத்தில் இலங்கையின் கீர்த்திக்கு களங்கம் கற்பிக்க அவை முயல்வதாகவும் அமைச்சர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

0 Responses to விடுதலைப் புலிகளின் நிழல் பாராளுமன்றத்தில்: அமைச்சர் ஜகத் புஷ்பகுமார

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com