Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் 112 பேரையும் அவர்களது 18 படகுகளையும் எதிர்வரும் 28ஆம் நாள்வரை தடுத்து வைக்குமாறு யாழ் பருத்தித்துறை நீதியாளர் உத்தரவிட்டிருக்கின்றார்.

இதேவேளை, தமிழ்நாட்டில் சிறீலங்கா துணைத் தூதரகம் நோக்கி ஆர்ப்பாட்டம் நடத்திச் செல்ல முற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உட்பட கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2 Responses to தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் தடுத்து வைப்பு – கனிமொழி விடுதலை

  1. அப்பன் எழுதி மகள் கதாநாயகியாக நடித்த நாடகம் அம்பலத்தில். தேர்தல் வியாபாரிகள் மக்களை ஏமாற்ற முயல்கின்றார்கள். இந்த நாடகத்திற்கு கொடூங்கோலன் மகிந்தனின் வகிபாகமும் இருக்கலாம்.

     
  2. இளமாறன்,தமிழகம், இந்தியா

    கடைசி கட்ட போரை திமுக நிறுத்த முனையவில்‌லை என்று‍ பலருக்கு‍ கோபம், அது‍ சுழ்நிலை, காங்கிரேஸ் தயவில் திமுக ஆட்சி. அதே நேரத்தில் திமுக மட்டுமில்லை, எந்த கட்சியும், கடைசி கட்ட போரை நிறுத்துவதற்கு‍ முனைப்புடன், போராட்டம் நடத்தவில்லை, தனது‍ சமூகத்துக்கு‍,இட ஒதக்கீடு‍ வேண்டும், என்று‍ பெரும் போராட்டம் நடத்த முடிந்த பாமக வுக்கு‍, கடைசி கட்ட போரை நிறுத்த பெரிய போராட்டத்தை நடத்த முடியாதா, இது‍ போல் வலிமையாக உள்ள அதிமுக, தேமுதிக ஏன் போராட்டம் நடத்த முன் வரவில்லை, எல்லாம் அரசியல் தான். திமுகாவின் காங்கிரேஸ் உறவு முறிந்து‍ விட்டால், காங்கிரேஸுடன் உறவு வைத்து‍ கொள்ள,அதிமுக, தேமுதிக க்கு‍ வசதியாக இருக்கும். ஏன், மதிமுகாவல் அந்த நேரத்தில் பெரிய போராட்டம் நடத்தியிருக்க முடியாதா, முடியும், ஆனால், ஆதிமுகாவை மீறி செயல் பட முடியாது. நிலமை இவ்வாறு‍ இருக்க திமுக மட்டும் இலங்கை தமிழர்களுக்கு‍ துரோகம் செய்து‍ விட்டது‍ என்று‍ கூறுவது‍ தவறு. திமுக இலங்கை தமிழர்களுக்கு‍ துரோகம் செய்ததோ, இல்லையோ நமக்கு‍ தெரியாது, ஆனால் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். கடைசி கட்ட போரில், அதிகமான புலி தலைவர்கள், தப்பித்து‍ சென்று‍ விட்டார்கள் என்பது‍, செய்தி. அப்படி‍ அது‍ உண்மையாக இருக்குமானால், அவர்கள் தப்பி செல்வதற்க்கு‍ உதவியவர்கள், திமுக தலைமையாகவே இருக்கும் என்பது‍ எனது‍ கனிப்பு. தப்பித்து‍ வந்த புலி தலைவர்கள் பதில் சொன்னால் மட்டுமே நமக்கு‍ தெரியும். எப்படி‍ இருப்பினும், விடுதலை புலிகளின் மீது‍ உள்ள இந்திய தடை நீங்கினால் மட்டு‍மே முடியும். புலிகள் மீது‍ தடையை விலக்க நீதி மன்றம் தான் தற்போதைய தீர்வு. இதற்கு‍ எந்த கட்சியேனும் உதவி செய்ய முன் வரும் என்று‍ நினைத்தால், அது‍ மதிமுக, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், மற்றும் திமுகவே இருக்க முடியும். விடுதலை புலிகள் மீது‍ இந்தியாவில் தடை வர, அதற்கு‍ பெரும் முனைப்பு காட்டியது‍ அதிமுகாவின் தலைவி ஜெயலலிதா தான், இதன் பிறகே, மற்ற நாடுகளிளும் புலிகளின் மீது‍ தடை வந்தது, இதை எவரும் மறக்க வேண்டாம். வருங்காலத்தில்,இலங்கை தமிழர்கள் மீது‍ தமிழக கட்சிகள் எவையேனும் கரிசனம் காட்டும் என்றால், மேற்க்குறிப்பிடப்ட்டுள்ள கட்சிகள் ஆகும். எப்படி‍ இருப்பினும், திமுக மீனவர்களுக்காக நடத்திய போராட்டம், வேஷமோ, உண்மையோ, எந்த வகையிலாவது‍ இலங்கையை எதிர்த்தால், அது‍ ஈழ தமிழர்களுக்கு‍ நல்லது‍, இது‍ நாள் வரையில் மற்ற சிறிய கட்சிகள் இலங்கை அரசுக்கு‍ எதிராக நடத்திய போராட்டத்தில், மிக குறைந்த கூட்டமே வந்தது. ஆயுதம் எடுத்து‍ போராட வீரம் மிக்க சிறு‍ கூட்டம் போதும். ஆனால் ஜனநாயக வழி போரட்டத்தில் பெரு‍ கூட்டமே அவசியம், பெருங் கூட்டத்தை கூட்ட திமுக, அதிமுகாவினால் மட்டுமே முடியும். மேலும் இந்தியாவை மாறி மாறி ஆளும் காங்கிரேஸ் மற்றும் பாஜக வின் ஆதரவும் அவசியம் அது‍ வேஷமாக இருந்தாலும் சரி , அரசியலாக இருந்தாலும் சரி. அகவே தமிழர்களே, எவரையும் எதிர்க்காமல், தூற்றாமல் வருகின்ற உதவியை பெற்று‍க் கொண்டு, புத்திசாலிதனமாக இனி செயல் பட வேண்டும். மேலும், தமிழ் நாட்டில் தேர்தலின் வெற்றி, தோல்விகளை நிர்னையம் செய்வது‍, ஜாதி அரசியல், கூட்டனிக் கட்சிகளின் பலம், மற்றும் தற்போதைய ஆட்சியின் செயல்ப்பாடு‍ மட்டுமே, இலங்கை விஷயம் இல்லை. அப்படி‍ இலங்கை விஷயம் தேர்தலை நிர்னையம் செய்வதாக இருந்தால், 2009 பாராளமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அக்கூட்டனிக் கட்சிகளின் பேச்சை நம்பி,தமிழக மக்கள் திமுவை தோற்‌க்கடித்திருப்பார்கள். மேலும், தமிழக மக்கள் புத்திசாலிகள், யாரை தேர்ந்தெடுத்தால் தமிழகத்துக்கு‍ நல்லது‍ என்பதை நன்கு‍ அறிவார்கள். ஆனால் வருகின்ற தேர்தலில் காங்கிரேஸ் தோற்க வேண்டும், அதுவே இறைவனிடம் எனது‍ வேண்டுகோள்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com