Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வல்வையில் இன்று அதிகாலை மரணமடைந்த தமிழீழ தேசியத் தலைவரின் தாயார் திருமதி வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை அவர்களுடைய இறுதிக் கிரியைகளுக்கான முயற்சிகளைக் குழப்புவதில் சிங்கள இராணுவம் முனைப்பாக இறங்கியுள்ளது.

பார்வதிப்பிள்ளை அவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட கட்டவுட்களை இராணுவம் வெள்ளை வானில் வந்து எடுத்துச் சென்றுள்ளது. வல்வை புளுஸ் கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. அதை யார் பறக்க விட்டது என்ற விசாரணைகளை இராணுவம் நடாத்துகிறதாகவும் தெரியவருகிறது.

மேலும் வல்வையில் நடைபெறவிருந்த விளையாட்டுவிழா ஒன்று இந்த துக்கரமான சம்பவத்தால் இடை நிறுத்தப்பட்டது. இதை நடாத்த வேண்டும் என்று இராணுவம் சம்மந்தப்பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. சிறீலங்காவில் நடப்பது யாருடைய ஆட்சி என்ற கேள்வியையும், சினத்தையும் இந்த நிகழ்வுகள் உலகம் முழுவதும் கிளப்பியுள்ளன...


1 Response to வல்வையில் இராணுவம் அட்டகாசம் - பதட்டமான நிலை (படங்கள், காணொளி இணைப்பு)

  1. பார்த்திபன் தமிழ்நாடு‍
    மாவீரன் திரு‍ பிரபாகரன் அவர்களின் தாயாரின் மறைவுக்கு‍ எனது‍ ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்திலும் இராணுவத்தின் அட்டகாசம் , தமிழர்கள் சுதந்திரமாக வாழ தனி தமிழீழமே தீர்வு

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com