காலனித்துவ ஆட்சியால் பாதிக்கப்பட்டு அதன் பின்விளைவாக உருவாக்கப்பட்ட கொடுங்கோல் ஆட்சியாளரின் அடக்குமுறைக்குள் சிக்குண்டு உரிமைகளை இழந்த மக்கள் பாரிஸில் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான ஒருவார போராட்டத்தை பெப்ரவரி 18 ஆம் திகதி பல அரசியல் கட்சிகள் அரசு சார்பற்ற அமைப்புகளின் தலைமையில் துவக்கி வைத்தனர்.பல நூற்றுகணக்கான அறிவியல் ஆளர்கள் தலைமையில் இன்றைய காலகட்டத்தில் நாடுகள் உலகமயப்படுதபட்டு புது உலகம் புதிய சட்டங்கள் என்று அதிகார வர்கள் நாடுகள் பேசிக்கொண்டு உலக விதிமுறைகளை மாற்றி கொண்டிருக்கும் நிலையில் தமிழ் கணக்கி (நியூ கலிடோனியா) பாலஸ்தினிய குர்திஸ்தான் தென் சஹாரா ட்சேசெனி போன்ற பல நாட்டு மக்களும் இன்று மக்கள் புரட்சி ஊடாக மக்களின் உரிமைகளை நிலைநாட்டியுள்ள துனிசியா எகிப்த்து மக்களும் இந்த வார போராட்டத்தில் பங்கெற்கின்றனர்.
இந்த வார போராட்டத்தில் பல கலந்துரையாடல்கள் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நிகழ்வுகள் நடை பெற இருக்கின்றது.
இதனைத் தொடர்ந்து 19ம் 20ம் திகதிகளில் ; Bellevilliose ,19 -21 Rue Poyer, Paris 75020 Metro Gambetta என்னும் இடத்தில் கண்காட்சி புத்தக வெளியீடுகள் புத்தகக் கண்காட்ச்சிகள் இடம் பெறும். சனிக்கிழமை மதியம் 1.00 மணி தொடக்கமும் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் பன்நாட்டு மக்களின் கண்காட்ச்சி இடம் பெறுகின்றது.
அதே நேரத்தில் பெப்ரவரி ௨௩ ஆம் திகதி புதன்கிழமை பரிஸ் 2 மாநகரசபையில் (8 Rue de la Ba,que Metro Bourse) மாலை 6.30 மணிக்கு தமிழரின் இனப்படுகொலை நடைபெற்று 18 மாதங்களின் பின்னர் என்ற தலைப்பில் ஒரு புகைப்படக் கண்காட்ச்சியும் அதனைத் தொடர்ந்து விவாத கருத்துப் பரிமாறலும் இடம்பெறும்.
இந்த வார நிகழ்வுகளில் உச்ச கட்ட போராட்டமாக பெப்ரவரி 26ம் திகதி மாபெரும் ஊர்வலமாக 60 ற்கு மேற்பட்ட பிரான்சு அரசியல் கட்சிகளும் மனிதநேய அமைப்புக்களுடன் இனவெறி ஒடுக்கு முறைக்கு எதிராக மக்களின் ஜனநாயக விருப்புக்களுக்கு மதிப்பளிக்கும்படி கேட்டு மாலை 15.00 மணிக் Place de la Republic இல் இருந்து பிரான்ஸ் ஆட்ச்சிபீடத்தை நோக்கிய போராட்டம் நடைபெற உள்ளது. இதில் நாம் பெருமளவில் கலந்து கொண்டு அழிவுகளுக்கு இடையில் இருந்தும் நாம் விழிப்பாக இந்த உலகத்துடன் நியாயம் கேட்டு உலக மக்களாகிய நாம் நீதி கேட்டு போராடவேண்டிய நேரத்தில் உலக மக்களுடன் சேர்ந்து எமது வாழ்வுரிமையை வலியுறுத்துவோம்.
எமது நில மீட்சி போராட்டத்தில் பல நாடுகளில் நடைபெறும் மக்கள் எழுச்சிகளை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் நாமும் புலம் பெயர்நாடுகளில் பல மக்கள் எழுச்சி போராட்டத்தை நடாத்தவேண்டியது மிக முக்கியம்.
தமிழ் ஈழமே மக்களின் முடிவு என்று பிரான்சில் 35௦௦௦ மக்கள் வாக்களித்து வலியுறுத்திய நாம் இன்று அனைவரும் எமது சுயநலவுரிமையை மீண்டும் மக்கள் எழுச்சிகள் ஊடாக எமக்கு தீர்வு தரும் வரை போராட வேண்டியது இன்றைய காலத்தில் முக்கியம் மாகிறது.
தமிழ் ஈழ மக்களே நாம் விழ விழ எழுந்து கொண்டே இருப்போம் எமக்கு நியாயம் கிடைக்கும் வரை எழுந்து தொடர்ந்து நிற்போம் வாருங்கள்.
தமிழீழ மக்கள் பேரவை- பிரான்சு
தொடர்பு: 06 15 88 42 21
மின்னஞ்சல்: mte.france@gmail.com








இளமாறன் தமிழ்நாடு
தமிழர்கள் சுதந்திரமாக வாழ தனி தமிழீழமே தீர்வு
தமிழர்கள் சுதந்திரமாக வாழ தனி தமிழீழமே தீர்வு