நாம் தமிழர் கட்சியின் மாநிலத்தலைவர் சீமான் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆளவேண்டும். தேசிய கட்சிகளின் ஆட்சி தேவையில்லை. எனவே சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வோம்.
இதற்காக மற்றவர்களை ஆதரிக்கவும் மாட்டோம். போட்டியிடவும் மாட்டோம். மக்கள் இயக்கமாகவே செயல்படுவோம் என்று தெரிவித்தார்.



i appreciate in your principals.my request continue doing in our aims thanks mr.seeman we are proud to be tamilan
தற்போது உள்ள சூழ்நிலையில் திரு சீமான் முடிவு வரவேற்கதக்கது. கலைஞர் ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டார், கை விட்டு விட்டார் என்று காரணத்தினால் ஜெயலலிதாவை ஆதரிப்பது என்ற முடிவு (இந்த செய்தி கிடைக்கும் வரை), எவ்வளவு பெரிய தவறு இழைக்க இருந்தார். பொது மக்கள்,
மாணவர்கள், உணர்வாளர்கள், அனைவரும் சீமான் பின் நின்று போராட வேண்டும் என்றால், கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் சீமான் பின் வர வேண்டும் எனில், அவர் மத்திய மாநில அரசை இலங்கை பிரச்சனையில் சாடுவதை விட்டு விட்டு (தேர்தலில் காங்கிரேஸை தோற்கடிப்பது அவசியம்) எந்த கட்சியின் தலைவரையும் தூற்ற கூடாது. (இலங்ககோவன், சுப்பரமனி சாமியை தவிர) உணர்சிவயப்பட்டு பொது கூட்டத்தில் அழிப்பேன், அடிப்பேன் என்று பேசுவதை விட்டு விட்டு, கொஞ்ம் கொஞ்மாக மாணவர்கள், உணர்வாளர்கள், இவர்களின் ஆதரவை பெற்று, நமக்கு வேண்டியதை ஜனநாயக வழியில் போராடி, அவசியமானால் நீதிமன்றம் சென்று சில உரிமைகளை பெற வேண்டும் (பிரபாகரன் படத்தை, விடுதலை புலிகள் கொடியை போரட்டத்தில் பயன்ப்படுத்துவது சம்பந்தமாக) மேலும் விடுதலை புலிகள் இயக்கத்தின் மீது உள்ள தடையை நீக்க நீதிமன்றம் செல்ல வேண்டும். (தற்போது வைகோ அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார்.)
விரைவில் தமி்ழ் ஈழம் வெல்வோம்
தற்போது நாடு கடந்த தமிழீழரசுக்கு ஆதரவளிப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
இளமாறன் தமிழ்நாடு