Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

1987ம் ஆண்டு காலப் பகுதியில் இந்தியப் படையினர் குடாநாட்டில் நிலை கொண்டிருந்த வேளை பறந்து திரிந்த மிகச் சிறியரக உலங்கு வானூர்திகளின் பறப்பு தற்போது மீண்டும் யாழில் ஆரம்பமாகியள்ளது.

'மணிக் ஹெலி' என முன்னர் மக்களால் நாமம் சூட்டப்பட்ட இவ்வாறான சிறிய உலங்கு வானூர்திகள் கடந்த சில தினங்களாக குடாநாட்டுப் பரப்பில் தொடர்ந்து பறந்து திரிகின்றன. யாழில் உள்ள விளையாட்டு மைதானங்களில் தரையிறக்கப்படும் உலங்கு வானூர்திகளை பார்வையிட மக்கள் கூடுகின்றனர்.

சிவப்பு, மஞ்சள் கலந்த நிறங்களில் இவை வானத்தில் பறந்து திரிவதை அவதானிக்க கூடியதாக இருந்தது. இவ்வாறான உலங்கு வானூர்திகளில் 2பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் வானூர்தி யாழ் மைதானம் ஒன்றில் தரையிறங்கி மீண்டும் பறக்கும் காணொளி

அதிர்வு

0 Responses to யாழ்ப்பாணத்தில் பறக்கும் மர்மமான ஹெலி (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com