Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசியத் தலைவரின் தாயார் பார்வதியம்மாவின் மறைவுச்செய்தி அறிந்து புலம்பெயர் அமைப்புக்கள் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துள்ளனர்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா

தமிழீழ தேசியத்தலைவரின் தாயார் திருவேங்கடம் பார்வதி அம்மா அவர்கள் இன்று (20 – 02 -2011) அதிகாலை சாவடைந்துள்ளார் என்பது மிகவும் வேதனையளிக்கிறது.

உலகத்தமிழ் மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள இவ்வேளையில் அவரது பிரிவால் வாடும் அவரது பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் அவர்களின் குடும்பத்தவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழின விடுதலைப் போரட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய எம் தேசத்தின் மகா அன்னையை அனைவரும் நினைவு கூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

உலகத்தமிழ் மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பார்வதி அம்மாவிற்கான வணக்கநிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல்கள் விரைவில் அறியதரப்படும்.

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

வந்தோரை வாழ வைத்த வல்வெட்டி தந்த தமிழ் தேசத்தின் தாயே
பார் புகழும் பார்வதி தாயே
பிரபஞ்சத்தின் பிரதிநிதியே
பிறப்பின் பெரும் படைப்பு நீ

பெறுமதி கூறமுடியா அணைப்பின் உயிர்ப்பு நீயம்மா
எம் மானம் காக்க தன் மானம் தந்தவளே
தனி மனித சரித்திரம் படைத்தவனை பெற்றவளே
எமது விடுதலை வரலாற்றில் நீ காலத்தின் பதிவு, அணையா தீ

தேசிய தலைவரின் தாயார், பார்வதி அம்மாளுக்கு யேர்மனியில் பல நகரங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறுகின்றது . நடைபெறவிருக்கும் அஞ்சலி நிகழ்வுகளின் 4 இடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மிகுதி இடங்களும் மிக விரைவில் அறிவிக்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

Heilbronn

20.02.2011

18:00 Uhr

Wächterstraße 1

74177 Bad Friedrichshall 



Bielefeld

20.02.2011

16:00 Uhr

Umwelt Zentrum

August-Bebel-Str. 16-19 (Rotes Kreuz )


Wuppertal

21.02.2011

18:00 Uhr

Hunenfeld Str. 63b

42285 Wuppertal


Berlin

21.02.2011

17:30 Uhr

St.- Simeon -Kirche

Wassertorstr. 21

10969 Berlin

1 Response to ஈழத்தாய் பார்வதியம்மாவுக்கு புலம்பெயர் அமைப்புக்களின் கண்ணீர் அஞ்சலிகள்

  1. இளமாறன் தமிழ் நாடு‍

    மாவீரன் திரு‍ பிரபாகரன் அவர்களின் தாயாரின் மறைவுக்கு‍ எனது‍ ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்திலும் இராணுவத்தின் அட்டகாசம் , தமிழர்கள் சுதந்திரமாக வாழ தனி தமிழீழமே தீர்வு

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com