Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெப்ரவரி 04 2011 வெள்ளிக்கிழமை சிறிலங்காவின் 63ஆவது சுதந்திரதினத்தை சிறிலங்கா கொண்டாடிக்கொண்டிருந்த அதேவேளையில் புலம்பெயர்ந்த தமிழர் வாழும் நாடுகளில் அதை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கனடா ரொறன்ரோவில் 40 St clair ave west இல் அமைந்துள்ள சிறிலங்காத் துணைத்தூதரகம் முன்பாக சர்வதேச கவனயீர்ப்புப் போராட்டம் ஓன்றைக் கனடியத் தமிழர் தேசிய அவையும் மாணவர் சமுதாயமும் இணைந்து ஒழுங்குசெய்திருந்தனர்.

சிறிலங்காத் துணைத்தூதரகம் முன்பாகப் பெருமளவில் மக்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்ததுடன் தமது தேசிய அடையாளங்களையும் வெளிப்படுத்தியிருந்தனர். அத்தோடு அன்றைய காலநிலையைக்கூடப் பொருட்படுத்தாது முதியவர்களும் குழந்தைகளும் மாணவர் சமுதாயமும் பெருமளவில் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தொடர்ந்து தமிழ் இளையோர் சார்பாகச் செல்வன் பிரியந்தும் நாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரதிநிதிகளான திரு. சண் மாஸ்டர் திரு.ஈழவேந்தன் ஐயா அவர்களும் கனடியத் தமிழர் தேசிய அவையின் சார்பில் திரு.மோகன் அவர்களின் உரைகளும் இடம்பெற்றன.

தமிழீழத்தை விட்டு சிறிலங்கா வெளியேறவேண்டும். ஐக்கிய நாடுகளின் விசாரணைக்கு கனடா உதவ வேண்டும் என்று மக்கள் குரல் எழுப்பினர். மதியம் 2.00 மணிக்குத் தொடங்கிய சர்வதேச உரிமைக்கான போராட்டம் தொடர்ந்து தமிழீழ விடுதலையை நோக்கியும் எம்மக்களின் விடிவுக்காகவும் அயராது உழைப்போம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற உறுதி மொழிகளுடன் மாலை 6.00மணிக்கு நிறைவுபெற்றது.


0 Responses to சிறிலங்காவின் சுதந்திரதினத்தை எதிர்த்து கனடாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com