மீளக்குடியமரவோ மீன்பிடிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ள கடலோரப் பகுதிகளில் தென்னிலங்கையிலிருந்து நூற்றுக்கணக்கான மீனவர்களை அழைத்துவந்து குடியேற்றுவதில் அப்பகுதி முகாம்களின் இராணுவத் தளபதிகளே முக்கிய பங்கினை வகிப்பதாகவும் வடமராட்சி கிழக்கு மீன்பிடியாளர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வன்னியில் தமிழ் மீனவர்கள் மீள்குடியேற்றப்படுவது திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு தென்னிலங்கையிலிருந்து கொணரப்படும் சிங்கள மீன்பிடியாளர்கள் மீன்வளப்படுகைகள் நிறைந்த இடத்தில் குடியேற்றப்படுகிறார்கள்.
அண்மைய வாரங்களில் ஆயிரக்கணக்கான சிங்கள மீனவர்கள் வன்னிக் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளனர். அங்கு மீன்பிடியில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள் மீன்வளம் நிறைந்திருக்கும் பகுதிகளை அடையாளம் காண நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
வடக்கு கிழக்கு பகுதிகளை இணைக்கும் பகுதியான கொக்கிளாயில் 240 சிங்களக் குடும்பங்கள் கடந்த மூன்று வாரங்களில் குடியேற்றப்பட்டுள்ளன.



0 Responses to முல்லைத்தீவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்?