Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகளின் முகவர்களாக, உளவாளிகளாக பௌத்த துறவிகளும் களமிறக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்புகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளன.

அவர்கள் பௌத்த துறவிகளின் வேடம் தரித்தபடி உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடவுள்ளார்கள். தமக்குக் கிடைக்கும் தகவல்களை புலனாய்வு அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு இடப்பட்டுள்ள பணியாகும்.

பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ள பெளத்த துறவிகளே இனம் காணப்பட்டு அவ்வாறு புலனாய்வு நடவடிக்கைகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களுடன் சிவில் நபர்களும் பௌத்த துறவி வேடம் தரித்து புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக் கொண்டவர்கள் குறித்து தகவல்களைத் திரட்டுதல், எதிர்க்கட்சிகளுடன் இணைந்துள்ள செல்வந்தர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் குறித்த தகவல்களைத் திரட்டி உரியவர்களிடம் கையளித்தல், பொதுமக்கள் மத்தியில் பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்துக்கு ஆதரவான பிரச்சாரத்தை மேற்கொள்ளல் என்பன அவர்களுக்கு இடப்பட்டிருக்கும் பணிகளாகும்.

அவ்வாறு போலியாக பௌத்த துறவி வேடம் தரிப்பவர்களை வழிநடாத்துவதும் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் பௌத்த துறவிகளின் மேலதிக பணியாகும்.

அவ்வாறாக புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் துறவிகள் மற்றும் போலித் துறவிகளுக்கு மாதமொன்றுக்கு பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் வரையான கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to புலனாய்வு அமைப்புகளின் முகவர்களாக பௌத்த பிக்குகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com