Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற தேசியத்தாய் பார்வதி அம்மாள் நினைவேந்தல் நிகழ்வு.

கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் நகர தலைமை அலுவலகத்தில் 20-02-2011 அன்று மாலை 6 மணி அளவில் தேசியத்தாய் பார்வதி அம்மாள் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது . இந்த நினைவேந்தல் நிகழ்விற்கு நகர அமைப்பாளர்களில் ஒருவரான பிரதீப் தலைமையேற்றார். மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் வினோபா என்ற வீரக்குமரன், நாம் தமிழர் சான்றோர் பேரவை உறுப்பினர் பேரா.முனைவர்..மணி, பெருந்தமிழர் வீரனார், மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் மணி.செந்தில் ஆகியோர் வீரவணக்க உரை நிகழ்த்தினார்கள்.

இந்த இரங்கல் கூட்டம் முடிந்த பின்னர் கட்சியின் நகர அவைக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு நகர அமைப்பாளர் பிரதீப் தலைமை வகித்தார். நகர அமைப்பாளர் இரகமதுல்லா என்ற தமிழ்வேந்தன் முன்னிலை வகித்தார். அண்மையில் புதுக்கோட்டையில் கொலைக்கார படையினரால் கொலை செய்யப்பட்ட கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தளபதி .மாவீரன் முத்துக்குமார் அவர்களின் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், கொலை செய்த கொலைக்கார கும்பலை காவல்துறையினர் உடனே கைது செய்ய கோரியும் தீர்மானங்கள் இயற்றப்பட்டது.








0 Responses to கும்பகோணத்தில் நடைப்பெற்ற தேசியத்தாய் நினைவேந்தல் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com