Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது விடுதலைப் போராட்டத்திற்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் பங்களிப்பு எவ்வளவு கனதியானது என்பதை நாமனைவரும் நன்கு அறிவோம். தாயகத்தில் வீரமிகு போராட்டம் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் எழுச்சி எமது தலைமைக்கு பக்க பலமாக இருந்து வருகின்றது என விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

15.02.2011
தமிழீழம்

அன்புடையீர்!

அநாமதேய மின்னிதழ்கள், இணையத்தளங்கள் தொடர்பானவை

எமது விடுதலைப் போராட்டத்திற்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் பங்களிப்பு எவ்வளவு கனதியானது என்பதை நாமனைவரும் நன்கு அறிவோம். தாயகத்தில் வீரமிகு போராட்டம் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் எழுச்சி எமது தலைமைக்கு பக்க பலமாக இருந்து வருகின்றது.

சிங்கள அரசுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் புலம்பெயர்ந்த மக்களின் பலத்தை சிதைக்கும் நோக்குடன் இராணுவ அதிகாரிகளும், புலனாய்வாளர்களும் புலம்பெயர் தேசங்களில் நிலைகொண்டு மறைமுகமாக நாசகார வேலைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர். எதிரியின் எல்லா வகையான சதித் திட்டங்களையும் முறிய டித்து எமது மாவீரர்களின் வழியில் உறுதியுடன் செயற்படுவோம்.

தமிழ் சமூகத்தில் பல அநாமதேய கருத்துக்களைத் தெரிவித்து வரும் கறுப்பு போன்ற மின்னிதழ்கள் மற்றும் தனிப்பட்டவர்களால் நடாத்தப்படும் அநாமதேய இணையத் தளங்களுக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்

0 Responses to எல்லா வகையான சதித் திட்டங்களையும் முறியடித்து மாவீரர்களின் வழியில் உறுதியுடன் செயற்படுவோம்: தமிழீழ விடுதலைப் புலிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com